Monday, August 5, 2019

 தாகத்தை அகற்ற 
அல்லாஹ்வுக்காக உதவுங்கள்
தண்ணீர் அல்லாஹ்வின் ஓர் 
உன்னத அருட்கொடை.   
மௌலானா ஹபீப் நத்வி
தானத்தில் சிறந்த தானம்

ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 
‘நீர் புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்” 
(நூல்: அஹ்மது நஸயீ-3666)

இறந்த விட்ட உங்கள் தாய் தந்தையருக்கு ஸதகதுல் ஜாரியா என்ற தர்மம் 
செய்யுங்கள் மறுமையயின் வாழ்விற்காக.
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி

சதகத்துல் ஜாரிய எனும் தர்மம்

சதகத்துல் ஜாரிய  என்பது ஒரு மனிதனுடைய ஜீவிய காலத்திலும், அவர் இறந்து விட்டபிறகும் நன்மைகளை வழங்கி கொண்டே இருக்கும் சில தர்மங்களைச் சார்ந்த காரியங்களாகும் அவைகளை பொது மக்களுக்கு பயன்படக்கூடிய இறையில்லம், மதரஸா , கல்விக்கூடம், மருத்துவமனை, தண்ணீர் விநியோகம் போன்றவைகளுக்கு வாரி வழங்குதல் அல்லது தாமே நிறுவி பொதுமக்களின் உபயோகத்துக்கு தர்மம் [வக்பு] செய்து விடுவதாகும். 


இறந்த விட்ட உங்கள் தாய் தந்தையருக்கு ஸதகதுல் ஜாரியா என்ற தர்மம் 
செய்யுங்கள் மறுமையயின் வாழ்விற்காக.
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி
ஒருவர் இறந்தபின் அவரை தொடர்ந்து மூன்று விஷயங்கள் மட்டும் நன்மைகள் வந்துகொண்டே இருக்கும் . அதில் ஒன்றுதான் இந்த சதகத்துல் ஜாரிய எனும் தர்மம் ஆகும் . இந்த விடயத்தை நம் மனதில் ஆழமாக பதியவைத்துக் கொள்ள வேண்டும் . நம் வாழ்வின் காலங்களில் சில சதகத்துல் ஜாரிய எனும் தர்மம் அவசியம் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் . நல்ல ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்க வேண்டும், கல்வி பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலும் , எத்தி வைப்பதிலும்  நாம் அவசியம் செய்ய வேண்டும்.
இதற்கோர் முன்மாதரியாக உஸ்மான் [ரலி] அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த ஓர் அற்புதாமான நிகழ்ச்சியை கூறலாம். அவர்களுடைய காலத்தில் ஒரு சமயத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஒரு யூதருக்குச் சொந்தமான ஒரு கிணறு மட்டும் வற்றாமல் நீரூற்று சுரந்து கொண்டே இருந்தது. அவன் சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு தண்ணீரை நல்ல விலைக்கு விற்றுக்கொண்டிருந்தான்.

அப்போது உஸ்மான் [ரலி] அவர்கள் அந்த யூதநிடத்தில் அந்த கிணற்றை விலைக்கு கொடுக்கும்படி கேட்டார்கள். அவன் தர மறுத்து விட்டான் , உஸ்மான் [ரலி] அவர்கள் அதோடு விட்டுவிடவில்லை மீண்டும் அவனிடம் சென்று , அன்பரே! ஒரு பகுதியையாவது விலைக்கு கொடு , மறு பகுதியை நீ வைத்துக்கொள் ஆளுக்கொருநாள் வீதம் முறை வைத்து பயன் படுத்திக்கொள்ளலாம் . உன்னுடைய முறை அன்று நீ என்ன விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக்கோள் என்று யோசனையை கூறினார்கள்.

யூதனும் சற்று யோசித்து விட்டு , ஆகா இது நல்ல யோசனையாகவல்லவா தெரிகிறது . இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடக்கூடாது நல்ல விலைக்கு விற்று பெரும் பணத்தை பெற்று விடலாம், அதோடு தமது முறையன்று தண்ணீரை விற்றும் பணம் சம்பாதிக்கலாம். ஆக இருவகையில் தமக்கு பெரும் பணம் கிடைத்து விடும் என்ற பேராசையில் விற்றுவிட சம்மதித்தான்.






இறந்த விட்ட உங்கள் தாய் தந்தையருக்கு ஸதகதுல் ஜாரியா என்ற தர்மம் 
செய்யுங்கள் மறுமையயின் வாழ்விற்காக.
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி


உஸ்மான் [ரலி] அவர்கள் இக்கிணற்றின் ஒரு பகுதியை வாங்கி மக்களுக்கு தர்மம் செய்து விட்டார்கள்  . மக்களும் மன மகிழ்வோடு தண்ணீரை எடுத்துச்சென்றனர் . நாளா வட்டத்தில் நிலைமை வேறு விதமாக மாறிவிட்டது. அதாவது தமது முறையன்று தண்ணீரை எடுப்பவர்கள் மறுநாளைக்கும் தேவையான தண்ணீரை சேர்த்து எடுத்து செல்லலாயினர்  .
அதன் பிறகு யூதனுடைய வியாபாரம் படுத்துவிட்டது. பணமா கொடுத்து வாங்குவோர் யாருமில்லை . இத்தகைய நிலையை சற்றும் எதிர்பாராத யூதன்  வேறு வழியின்றி தம்மிடமிருந்த மற்றொரு பகுதி கிணற்றையும் உஸ்மான் [ரலி] அவர்களிடமே விற்று விட்டான் அவர்கள் அதனையும் வாங்கி பொது மக்களின் உபயோகத்திற்கு தர்மமாக கொடுத்து விட்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக இருக்கின்றன. 

 இந்த அடிப்படையிலே தான் முன்னோர்கள் பொது மக்களின் தேவைக்காக , வழிப்போக்கர்களின் தேவைக்காக, சிற்சில இடங்களில் தண்ணீரை தேக்கிவைத்து விநியோகித்து வந்தார்கள். இன்னும்சில இடங்களில் தலைசுமையை தானாகாவே இறக்கி வைக்கவும் பிறகு தாமாகவே  தூக்கி தலையில் வைத்துக்கொள்ளவும் வசதியாக  சுமைதாங்கி என்ற பெயரில் உயரமான ஓர் இடத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்  இன்னும் சிலர் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வைத்து வளர்த்திருந்தார்கள் . மேலும்  பொது மக்களுக்குத் தேவையான பல நல்ல காரியங்களையும் செய்து வந்தார்கள். இத்தகைய காட்சிகளை இன்றும் கூட கிராமங்களில் காணலாம். இப்படிப்பட்ட காரியங்கள்தான் சதகத்துல் ஜாரிய எனும் தர்மமாகும்.


எது தர்மம்

 

தர்மம் என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் . இருப்பினும் எது உண்மையான  தர்மம் , எதை தர்மம் செய்தால் முழுமையான நன்மை கிடைக்கும் என்பதை புரிந்து  கொள்ள வேண்டும் அல்லவா?
இதைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் ..

''நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதிலிருந்து [அல்லாஹ்வுக்காக] நீங்கள் செலவு செய்யாத வரை நன்மையை பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்.. எந்த பொருளை  [அவ்வாறு] நீங்கள் செலவு செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ்  அதனை  முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான்'' என்று கூறுகிறான்.
அல்குர் ஆன் .. 3-92]

இந்த வசனம் அருளப்பட்ட போது  நபி [ஸல்] அவர்களுடன் இருந்த அவர்களின் நண்பர் அபூதல்ஹா [ரலி] அவர்கள் இறைதூதர் அவர்களே! என்னுடைய சொத்துக்களில் எனக்கு மிகவும் பிரியமானது  என்னுடைய பைரஹா எனும் தோட்டமாகும் அல்லாஹ்வின்  பொருத்தத்தை பெறுவதற்காக அதனை தர்மம்  செய்து விட விரும்புகிறேன் என்று கூறுகிறார்கள்.

 

நண்பரின் நன்நோக்கத்தை புரிந்துகொண்ட நபி [ஸல்] அவர்  நண்பரே! அந்த தோட்டம்  நல்ல பலன் தரக்கூடிய தோட்டமாக இருக்கிறது. எனவே அதனை உங்களுடைய உறவினர்களில் இருக்கக்கூடிய ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுப்பது நலமாகத் தெரிகிறது  . என யோசனைக் கூறினார்கள் நண்பரும் அவ்வாறே செய்து முடித்தார். இதைப்போன்ற எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் குவிந்து கிடக்கின்றன.
மேற்கூறப்பட்ட இறை வசனத்தையும் அந்த நிகழ்ச்சியையும் நன்கு சிந்தித்துப் பாருங்கள்! தர்மம் என்பது , நமக்குப்பயன் படாத பொருட்கள் மிச்சம் மீதி இருக்கும் உணவுப்பொருட்கள், உபயோகமற்ற ஆடைகள் , தேவையின்றி ஒதுக்கி வைக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கொடுப்பது உண்மையான தர்மம் அல்ல  என்பதையும், நாம் எதை  உண்ண  உடுத்த உபயோகிக்க விரும்புகிறோமோ அவற்றையோ அல்லது அவற்றில் சிலதையோ கொடுப்பது தான் உண்மையான  தர்மம் என்பதையும் மிக அழகான முறையில் விளக்கிக்காட்டுகின்றன.

அல்லாஹ் மிக அறிந்தவன் .

 


இறந்த விட்ட உங்கள் தாய் தந்தையருக்கு ஸதகதுல் ஜாரியா என்ற தர்மம் 
செய்யுங்கள் மறுமையயின் வாழ்விற்காக.
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி

தானத்தில் சிறந்த தானம்




தானத்தில் சிறந்த தானம்
தானத்தின் வகைகள் பல உண்டு. அன்னதானம், பொருள் தானம், பணம் தானம், கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு தானம் போன்றவற்றில் ‘நீர் தானமும்’ சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

இத்தகைய தானங்களில் இஸ்லாம் தேர்ந்தெடுத்த சிறந்த தானமாக ‘நீர்தானம்’ திகழ்கிறது. இது குறித்த நபிமொழிகள் வருமாறு: ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்” (நூல்: அஹ்மது நஸயீ-3666)

“ஹள்ரத் ஸஃதுபின் உப்பாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் தர்மம் செய்வதை பிரியப்படுவார். எனவே, நான் அவர்களின் சார்பாக தர்மம் செய்தால் அது அவருக்கு பயனளிக்குமா?’ என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் பயன் தரும், தண்ணீரை தர்மம் செய்வதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்”.

தண்ணீர் சிறந்த தானமாக தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன? ஏன்? எதற்கு? என ஆய்வு செய்யும்போது நீரில்லாமல் உலகம் இயங்க முடியாது. இந்த கூற்று உண்மையானது!

“உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம்” (21:30) என்பது திருமறையின் கூற்றாகும்.

நீரில்லாமல் உயிர்கள் இல்லை, நீரில்லாமல் உலகம் இல்லை. நீரை நம்பித்தான் உயிரும், உலகமும் உருவாக் கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் அடிப்படையானது நீர் ஆதாரம். இது மனித இனத்திற்கு மட்டும் முக்கியமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது. மரம், செடி, கொடி, தாவரம், வனவிலங்கு, வீட்டு வளர்ப்புப் பிராணி, கால்நடை, ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பன போன்ற அனைத்து உயிரினங்களில் ஆரம்பித்து மனித கண்களுக்கு புலப்படாத ‘ஜின் இனம்’ வரைக்கும் உயிர் வாழ நீர் ஆதாரம் அவசியம்.

“ஒருவர் ஒரு கிணற்றை தோண்டுகிறார். அதிலிருந்து ஜின் இனம், மனித இனம், பறவை இனம் போன்ற உயிரினம் நீர் அருந்துவதால் அவருக்கு மறுமை நாளில் இறைவன் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

                                     أفضل الصدقة سَقيُ الماء    
                           The Best Charity Is Giving Water 
                      To Drink Prophet Muhammad (PBUH)

மரணத்திற்கு பிறகும் நன்மை தரும் நீர் தானம்

“ஒரு இறைவிசுவாசி மரணித்த பிறகும் அவரை வந்து அடையக்கூடிய நற்செயல்களில் முக்கியமானவை:

1. கல்வி: அதை அவர் கற்றுக்கொடுத்து பரப்பவும் செய்கிறார்.

2. நல்ல குழந்தையை அவர் விட்டுச் சென்றிருக்கிறார்.

3) ஒரு புத்தகத்தை அவர் வாரிசு பொருளாக விட்டுச் சென்றிருக்கிறார்.

4) ஒரு பள்ளிவாசலை அவர் கட்டியுள்ளார்.

5) வழிப்போக்கருக்காக ஒரு தங்குமிடத்தைக் கட்டியுள்ளார்.

6) ஓடக்கூடிய ஒரு நீர் நிலையை உருவாக்கி இருக்கிறார்.

7) தமது செல்வத்திலிருந்து, ஆரோக்கியமாக வாழும் போது தர்மம் செய்திருக்கிறார்.

இவை அனைத்தும் அவரின் மரணத்திற்கு பிறகும் அவரை வந்தடையும் நன்மை பயக்கும் நற்செயல்களாக திகழ்கின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா)

ஒருவர் தமது மரணத்திற்கு பின்பும் தமக்கு நன்மை வந்து அடைய வேண்டும் என நினைத்தால், அதிகமாக நீர் தானங்களை நிறைவேற்றுவதுடன், நிரந்தரமான நீர் தேக்கங்களையோ அல்லது நீர் தொட்டிகளையோ அல்லது நீர் நிலைகளையோ ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

வாயில்லாத ஜீவனும், நீர் தானமும்

“ஒரு மனிதர் பாதையில் கடந்து செல்லும்போது அவருக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. அருகிலுள்ள ஒரு கிணற்றில் இறங்கி அதன் நீரை பருகி மேலே வரும்போது ஒரு நாய் தாகத்தால் ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதை காணுகிறார்.

தமக்கு ஏற்பட்ட தாகத்தை போன்று நாய்க்கும் ஏற்பட்டிருப்பதாக தனக்குள் பேசிக்கொள்கிறார். பிறகு கிணற்றில் இறங்கி தமது காலணியை கிணற்றில் முக்கி தண்ணீரை நிரப்பி காலணியை தமது வாயால் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்து நாய்க்கு நீர் புகட்டுகிறார். இதனைக் கண்ட இறைவன் அவரை நன்றி பாராட்டி அவரின் பாவத்தை மன்னித்தான்.

இதைக்கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே, உயிரினங்கள் மீது கருணை காட்டுவதாலுமா நற்கூலி கிடைக்கும்?’ என வினவினார்கள். ‘ஆம், ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதாலும் நற்கூலி கிடைக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி-2363; முஸ்லிம்- 2244) 

வாயில்லாத ஜீவனுக்கு நீர் புகட்டுவதால் இறைவனே மனமுவந்து பாராட்டி பாவத்தை மன்னிக்கும்போது மனிதன் சக மனிதனுக்கு நீர் புகட்டுவதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்? இறைவன் அதைவிட எந்தளவு பாராட்டுவான்? என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் ஹள்ரத் ஹாகிம் (ரஹ்) அவர் களின் முகத்தில் ஒரு காயம் இருந்தது. அது ஏறக்குறைய ஒரு ஆண்டு காலமாக இருந்தது. “உங்களின் நோய்க்கு தர்மத்தைக் கொண்டு சிகிச்சை பெறுங்கள்” என்ற நபிமொழியை அவர்கள் கேள்விப்படுகிறார்கள்.

தர்மத்தில் சிறந்தது நீர் தர்மம். எனவே, இமாம் ஹள்ரத் ஹாகிம் (ரஹ்) முஸ்லிம்களின் வீடுகளின் வாசலுக்கு முன் நீர் தொட்டியை அமைத்து கொடுத்தார்கள். அதிலிருந்து மக்களும், அங்கு வந்து செல்வோரும் நீரைப் பருகினார்கள். இந்த செயலால் அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நிவாரணம் கிடைத்தது.

ஒரு மனிதர், ஹள்ரத் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் வந்து, “எனது முட்டுக்காலில் ஒரு காயம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் பல மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து ஆலோசனைகளை கேட்டு, மருந்திட்டு வந்தேன். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகியும் அது குணமாகவில்லை” என்றார்.

அதற்கு ஹள்ரத் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அவரைப் பார்த்து “நீங்கள் மக்களுக்கு நீர் தேவைப்படும் இடத்தில் ஒரு கிணற்றை ஏற்படுத்துங்கள். இவ்வாறு ஏற்பாடு செய்தால் உனது மூட்டுவலி குணமாகும்” என்றார்கள். அவரும் அவ்வாறே செய்தார். அவரின் மூட்டுவலியும் குணமாகியது (பைஹகீ).

தர்மம் செய்வதினால் நன்மை கிடைக்கும். எனினும் தண்ணீரை தர்மம் செய்தால் நன்மைகள் மட்டுமல்ல. நமது உடலில் உள்ள பிணியும் அதனால் நீங்கி விடுகிறது.

தண்ணீரை விட மிகச் சிறந்த தர்மம் ஏதுமில்லை. ‘தமக்கு போக மீதமுள்ள தண்ணீரை பிறருக்கு வழங்கிட வேண்டும்’ என இஸ்லாம் கூறுகிறது. தண்ணீர் அல்லாஹ்வின் அருட்கொடை. அது மக்களின் பொது சொத்து. அது ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ சொந்தமானதல்ல.

ஒருவரின் தேவைக்கேற்ப நீரை பயன்படுத்திக் கொள்ளலாம். அனாவசியமாக அதை வீண் விரயம் செய்யக் கூடாது. தேவைக்கு மிஞ்சியதை தண்ணீரின்றி அவதிப் படும் மக்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். இதுதான் இஸ்லாம் கூறும் இறுதியான உறுதியான தீர்வு.

மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி,

பாட்டப்பத்து, நெல்லை டவுன். 


 மனிதர்களுக்கு எவ்வளவு அழகான செய்தி!

 தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை 
5அறிவு உள்ளவைக்கு தெரியுது 
6 அறிவு உள்ளவர்க்கு தெரியல



 

 

 

 

 

டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் சுமைத்

ஒரு மனிதன் வாழ்ந்தால் இவரைப்போல் வாழ வேண்டும்
நம் கப்ருக்கு நாம் செய்த முதலீடு என்ன?...
இவர்தான் உண்மையான செல்வந்தர்..


ஆப்பிரிக்காவில் அவர் வாழ்ந்த காலத்திலிருந்து அவர் செய்த சேவைகளின் சிறப்பம்சங்கள்:

9,500 அனாதைகளுக்கு ஆதரவு

95,000 மாணவர்களுக்கு நிதி உதவி 

5,700 மசூதிகள்

200  பெண்களுக்கு பயிற்சி மையங்கள்

860 பள்ளிகள்

4 பல்கலைக்கழகங்கள்

102 இஸ்லாமிய மையங்கள்

9,500 கிணறுகள்

51 மில்லியன் குர்ஆன்கள் விநியோகிக்கப்பட்டன

7 மில்லியன் மக்கள் ,பாதிரியார்கள் மற்றும் ஆயர்கள் அவரது முயற்சியில்  இஸ்லாத்திற்கு திரும்பினர்.



இந்த நன்மையை நீங்களும் பெற ஆர்வமாக இருப்பீர்களேயானால்,


இது போன்ற வறட்சியான பல கிராமங்களில் குடிநீர் கை அடி பம்ப் (இறைப்பான்) மற்றும் ஆழ குழாய்கள் அமைக்க வேண்டி உங்களின் பங்களிப்பை தாராளமாக வழங்க.

 


தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அல்-ஃபதஹ் டிரஸ்ட்

தொடர்புக்கு:

ஜனாப்.அய்யூப் 90940 04414

என்ற எண்ணில் அணுகவும்.

https://waterproject313.blogspot.com/
































































































































































































இறந்த விட்ட உங்கள் தாய் தந்தையருக்கு ஸதகதுல் ஜாரியா என்ற தர்மம் 
செய்யுங்கள் மறுமையயின் வாழ்விற்காக.
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி

 தண்ணீர் ஒரு மகத்தான அருட்கொடை!
بسم الله الرحمن الرحيم
தண்ணீர் ஒரு மகத்தான அருட்கொடை!

 
முன்னுரை:
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பல விவசாயிகள் இதனால் மரணமடைந்துள்ளார்கள் நம் மாநிலம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரின் மகத்துவத்தையும். அதனை பயன்படுத்தும் முறைகளையும் நாம் அவசியம் தெறிந்து கொள்வதோடு தற்பொழுது இந்த வறட்சி நீங்கி செழிப்பான நிலை உருவாக நாம் செய்யவேண்டியது என்ன என்பதையும் இவ்வாரத்தில் கான்போம்.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய மகத்தான அருட் கொடைகளில் தண்ணீருக்கு எப்போதுமோ முன்னுரிமை உண்டு…………

1.  தண்ணீர் அல்லாஹ்வின் ஓர் உன்னத அருட்கொடை.

عن أبي هريرة رضي الله عنه  يقول: قال رسول الله صلى الله عليه وسلم: "أول ما يقال للعبد يوم القيامة: ألم أصحح جسمك وأرويك من الماء البارد"؟ (صحيح إبن حبان : 7364)

மறுமை நாளில் ஒரு அடியானிடம் கேட்கப்படும் முதல் (கேள்வி) உன் உடலுக்கு ஆரோக்கியத்தை நான் வழங்க வில்லையா? குளிர்ந்த தண்ணீரின் மூலம் நான் உன் தாகம் தீர்க்க வில்லையா ? என்பதேயாகும். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்: 7364)

2.  தண்ணீரின் முக்கியத்துவம்.

 
1.  தண்ணீர் உயிர்களை படைப்பதற்கு முக்கிய ஆதாரமாகும்.
وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌  اَفَلَا يُؤْمنونِ
உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் (21-30)

قال الله عزّ وجلّ: وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي َلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (النور: 45)

ஊர்ந்து செல்லக்கூடிய ஒவ்வொன்றையும் தண்ணீரிலிருந்தே அல்லாஹ் படைத்தான். அவற்றில் சில தன் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன.அவைகளில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவைகளில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீது சக்தி பெற்றவன்.

عن أبي هريرة قال قلت : يا رسول الله انى إذا رأيتك طابت نفسي وقرت عيني فأنبئني عن كل شيء فقال كل شيء خلق من ماء .......مسند أحمد :  7919

அபூஹூரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நான் உங்களை காணுகையில் என் உள்ளம் மகிழ்கின்றது. என் கண் குளிச்சியடைகின்றது. ஆதலால் தாங்கள் எனக்கு ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பொருளும் தண்ணீரிலிருந்தே படைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்கள்.                   (அஹ்மத்: 7919)                                                            

2.  தண்ணீர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மட்டுமே கிடைக்கப் பெறும் ஜீவாதாரமாகும்.


أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ (68)  أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ (69)  لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ  (الواقعة: 68 – 70).

நீங்கள் குடிக்கின்ற தண்ணீரை கவனித்தீர்களா? அதனை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நாடினால் அதனை (குடிக்கமுடியாத) உப்பு நீராக ஆக்கி இருப்போம். எனவே நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

‌وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُ‌ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ‏ 
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
(அல்குர்ஆன் : 15:22)

3.   உயிரற்ற பூமியை தண்ணீரைக் கொண்டே அல்லாஹ் செழிப்படையச் செய்கின்றான்.



وَهُوَ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ‌ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۙ‏ 
இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
(அல்குர்ஆன் : 25:48)
لِّـنُحْیِۦَ بِهٖ بَلْدَةً مَّيْتًا وَّنُسْقِيَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِىَّ كَثِيْرًا‏ 
இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.
(அல்குர்ஆன் : 25:49)

4.  தண்ணீர் தந்தோருக்கு நபிகளார் காட்டிய நன்றியுணர்வு (கைமாறு)


 
           عَنْ عِمْرَانَ، قَالَ: كُنَّا فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّا أَسْرَيْنَا حَتَّى كُنَّا فِي آخِرِ اللَّيْلِ، وَقَعْنَا وَقْعَةً، وَلاَ وَقْعَةَ أَحْلَى عِنْدَ المُسَافِرِ مِنْهَا، فَمَا أَيْقَظَنَا إِلَّا حَرُّ الشَّمْسِ، وَكَانَ أَوَّلَ مَنِ اسْتَيْقَظَ فُلاَنٌ، ثُمَّ فُلاَنٌ، ثُمَّ فُلاَنٌ - يُسَمِّيهِمْ أَبُو رَجَاءٍ فَنَسِيَ عَوْفٌ ثُمَّ عُمَرُ بْنُ الخَطَّابِ الرَّابِعُ - وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَامَ لَمْ يُوقَظْ حَتَّى يَكُونَ هُوَ يَسْتَيْقِظُ، لِأَنَّا لاَ نَدْرِي مَا يَحْدُثُ لَهُ فِي نَوْمِهِ، فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ وَرَأَى مَا أَصَابَ النَّاسَ وَكَانَ رَجُلًا جَلِيدًا، فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ بِالتَّكْبِيرِ، فَمَا زَالَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ بِصَوْتِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا اسْتَيْقَظَ شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ، قَالَ: «لاَ ضَيْرَ - أَوْ لاَ يَضِيرُ - ارْتَحِلُوا»، فَارْتَحَلَ، فَسَارَ غَيْرَ بَعِيدٍ، ثُمَّ نَزَلَ فَدَعَا بِالوَضُوءِ، فَتَوَضَّأَ، وَنُودِيَ بِالصَّلاَةِ، فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا انْفَتَلَ مِنْ صَلاَتِهِ إِذَا هُوَ بِرَجُلٍ مُعْتَزِلٍ لَمْ يُصَلِّ مَعَ القَوْمِ، قَالَ: «مَا مَنَعَكَ يَا فُلاَنُ أَنْ تُصَلِّيَ مَعَ القَوْمِ؟» قَالَ: أَصَابَتْنِي جَنَابَةٌ وَلاَ مَاءَ، قَالَ: «عَلَيْكَ بِالصَّعِيدِ، فَإِنَّهُ يَكْفِيكَ»، ثُمَّ سَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَكَى إِلَيْهِ النَّاسُ مِنَ العَطَشِ، فَنَزَلَ فَدَعَا فُلاَنًا - كَانَ يُسَمِّيهِ أَبُو رَجَاءٍ نَسِيَهُ عَوْفٌ - وَدَعَا عَلِيًّا فَقَالَ: «اذْهَبَا، فَابْتَغِيَا المَاءَ» فَانْطَلَقَا، فَتَلَقَّيَا امْرَأَةً بَيْنَ مَزَادَتَيْنِ - أَوْ سَطِيحَتَيْنِ - مِنْ مَاءٍ عَلَى بَعِيرٍ لَهَا، فَقَالاَ لَهَا: أَيْنَ المَاءُ؟ قَالَتْ: عَهْدِي بِالْمَاءِ أَمْسِ هَذِهِ السَّاعَةَ وَنَفَرُنَا خُلُوفٌ، قَالاَ لَهَا: انْطَلِقِي، إِذًا قَالَتْ: إِلَى أَيْنَ؟ قَالاَ: إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ، قَالاَ: هُوَ الَّذِي تَعْنِينَ، فَانْطَلِقِي، فَجَاءَا بِهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثَاهُ الحَدِيثَ، قَالَ: فَاسْتَنْزَلُوهَا عَنْ بَعِيرِهَا، وَدَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ، فَفَرَّغَ فِيهِ مِنْ أَفْوَاهِ المَزَادَتَيْنِ - أَوْ سَطِيحَتَيْنِ - وَأَوْكَأَ أَفْوَاهَهُمَا وَأَطْلَقَ العَزَالِيَ، وَنُودِيَ فِي النَّاسِ اسْقُوا وَاسْتَقُوا، فَسَقَى مَنْ شَاءَ وَاسْتَقَى مَنْ شَاءَ وَكَانَ آخِرُ ذَاكَ أَنْ أَعْطَى الَّذِي أَصَابَتْهُ الجَنَابَةُ إِنَاءً مِنْ مَاءٍ، قَالَ: «اذْهَبْ فَأَفْرِغْهُ عَلَيْكَ»، وَهِيَ قَائِمَةٌ تَنْظُرُ إِلَى مَا يُفْعَلُ بِمَائِهَا، وَايْمُ اللَّهِ لَقَدْ أُقْلِعَ عَنْهَا، وَإِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْنَا أَنَّهَا أَشَدُّ مِلْأَةً مِنْهَا حِينَ ابْتَدَأَ فِيهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْمَعُوا لَهَا» فَجَمَعُوا لَهَا مِنْ بَيْنِ عَجْوَةٍ وَدَقِيقَةٍ وَسَوِيقَةٍ حَتَّى جَمَعُوا لَهَا طَعَامًا، فَجَعَلُوهَا فِي ثَوْبٍ وَحَمَلُوهَا عَلَى بَعِيرِهَا وَوَضَعُوا الثَّوْبَ بَيْنَ يَدَيْهَا، قَالَ لَهَا: «تَعْلَمِينَ، مَا رَزِئْنَا مِنْ مَائِكِ شَيْئًا، وَلَكِنَّ اللَّهَ هُوَ الَّذِي أَسْقَانَا»، فَأَتَتْ أَهْلَهَا وَقَدِ احْتَبَسَتْ عَنْهُمْ، قَالُوا: مَا حَبَسَكِ يَا فُلاَنَةُ، قَالَتْ: العَجَبُ لَقِيَنِي رَجُلاَنِ، فَذَهَبَا بِي إِلَى هَذَا الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ فَفَعَلَ كَذَا وَكَذَا، فَوَاللَّهِ إِنَّهُ لَأَسْحَرُ النَّاسِ مِنْ بَيْنِ هَذِهِ وَهَذِهِ، وَقَالَتْ: بِإِصْبَعَيْهَا الوُسْطَى وَالسَّبَّابَةِ، فَرَفَعَتْهُمَا إِلَى السَّمَاءِ - تَعْنِي السَّمَاءَ وَالأَرْضَ - أَوْ إِنَّهُ لَرَسُولُ اللَّهِ حَقًّا، فَكَانَ المُسْلِمُونَ بَعْدَ ذَلِكَ يُغِيرُونَ عَلَى مَنْ حَوْلَهَا مِنَ المُشْرِكِينَ، وَلاَ يُصِيبُونَ الصِّرْمَ الَّذِي هِيَ مِنْهُ، فَقَالَتْ: يَوْمًا لِقَوْمِهَا مَا أُرَى أَنَّ هَؤُلاَءِ القَوْمَ يَدْعُونَكُمْ عَمْدًا، فَهَلْ لَكُمْ فِي الإِسْلاَمِ؟ فَأَطَاعُوهَا، فَدَخَلُوا فِي الإِسْلاَمِ (خ:344)

344. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்கு தூக்கம் மேலிட்டது. பயணிக்கு அதைவிட இன்பமான தூக்கம் எதுவும் இருக்க முடியாது. அந்தத் தூக்கத்திலிருந்து எங்களை (அதிகாலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. முதல் முதலாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் இன்னவர் அடுத்த இன்னவர் அவரை அடுத்து இன்னவர் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ரஜா எழுந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறினார். அவருக்கு அடுத்த அறிவிப்பாளரான அவ்ஃப் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார். நான்காவதாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஆவார்கள்.'                            
நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்கள் தாமாகவே தூக்கத்திலிருந்து விழிக்கும் வரை வேறு யாராலும் எழுப்பப்பட மாட்டார்கள். காரணம் அவர்களின் தூக்கத்தில் என்ன செய்தி வருமென்பது எங்களுக்குத் தெரியாது. உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து மக்களுக்கு ஏற்பட்ட (ஸுப்ஹ் தொழுகை தவறிப்போன) இந்நிலையைப் பார்த்ததும் அல்லாஹு அக்பர்!' என்று சப்தமிட்டார். அவர் திடகாத்திரமான மனிதராக இருந்தார். அவர் சப்தமிட்டுத் தக்பீர் முழங்கிக் கொண்டே இருந்தார். அவர்களின் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். உடனே மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது 'அதனால் எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டும் புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் உளூச் செய்தார்கள். தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டது. மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். 'ஜமாஅத்துடன் நீர் தொழாமலிருக்கக் காரணமென்ன?' என்று அவரிடம் கேட்டபோது 'எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் இல்லை' என்று அவர் கூறினார். 'மண்ணில் தயம்மும் செய். அது உனக்குப் போதுமானது' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.                         
பின்னர் நபி(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் சென்று 'தாகமாக இருக்கிறது; தண்ணீர் இல்லை' என முறையிட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி ஒரு மனிதரையும் அவர் பெயரை அபூ ரஜா குறிப்பிட்டார்கள். அவ்ஃப் என்பவர் மறந்துவிட்டார். அலீ(ரலி) அவர்களையும் அழைத்து' நீங்கள் இருவரும் சென்று தண்ணீரைத் தேடுங்கள்' என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தண்ணீரைத் தேடிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள்.                  
'தண்ணீர் எங்கே கிடைக்கிறது?' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். 'தண்ணீர் ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது. எங்களுடைய ஆண்கள் தண்ணீருக்காகப் பின்தங்கிவிட்டனர்' என அப்பெண் கூறினாள். 'அப்படியானால் நீ புறப்படு' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். 'எங்கே?' என்று அவள் கேட்டாள். 'அல்லாஹ்வின் தூதரிடம்' என்று கூறினார்கள். 'மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?' என்று அப்பெண் கேட்டாள். 'நீ கூறுகிற அவரேதான்' என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.

'அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் சொல்லுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல்விட்டுவிட்டார்கள். 'எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையான அவர்தாம் கடைசியாக வந்தவர். அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து 'இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்)அவர்கள் மீது இருந்த வெறுப்பு நீங்கிவிட்டது. அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் பிறகு அத்தோல் பையில் இருப்பது போன்று எங்களுக்குத் தெரிந்தது. (தண்ணீர் குறையவில்லை.) 'அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம் மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் (கட்டி) அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர் அந்தப் பெண்ணிடம் 'உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை; அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான்' என்பதைத் தெரிந்து கொள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.               
அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட நேரத்தை விடத் தாமதமாக வந்தபோது பெண்ணே! நீ பிந்தி வரக்காரணமென்ன?' என்று கேட்டதற்கு 'ஓர் ஆச்சரியமான விஷயம் நிகழ்ந்தது. இரண்டு மனிதர்கள் என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படக் கூடிய அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படியெல்லாம் செய்தார்' (என நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள்.)                   
அவள் தன் கையின் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் வானத்தின் பக்கம் உயர்த்தி 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக இருக்க வேண்டும்' என்று கூறினாள்.
பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.             
ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தாரிடம்'இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்) உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?' என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்' என இம்ரான்(ரலி) அறிவித்தார்.                                                                                                                                                              

5.  தண்ணீரை அல்லாஹ் எப்படி தேக்கி வைத்துள்ளான்?


 
وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ وَاِنَّا عَلٰى ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ‌ ‏ 
மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
(அல்குர்ஆன் : 23:18)

•  பனிப்பாரைகளாக!
•  நிலத்தடி நீராக!
•  ஆறுகளாக!
•  ஊற்றுகளாக ……….

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَـكَهٗ يَنَابِيْعَ فِى الْاَرْضِ
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்;
(அல்குர்ஆன் : 39:21)

قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّاْتِيْكُمْ بِمَآءٍ مَّعِيْنٍ 
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
(அல்குர்ஆன் : 67:30)

6.  மனிதன் தண்ணீரை எப்படி தேக்கி வைத்துள்ளான்?
1.  அணைகள்
2.  ஏரிகள்
3.  கண்மாய்கள்
4.  குளங்கள்
5.  குட்டைகள்….

لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور (15) فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل (16) ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور (السبأ: 15-17)
34:15. நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).

34:16. ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம் இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும் சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.

குறிப்பு: டி.எஸ் சஞ்சீவி குமார் எழுதிய ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு என்ற புத்தகத்தை படித்துப் பார்த்தால் நம் முன்னோர்கள்; அணைகள் ஏரிகள் கண்மாய்கள் குளங்கள் குட்டைகளை எப்படி அமைத்து நீரை தேக்கி வைத்தார்கள் என்பதை அறியலாம்.

7.  தண்ணீரை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும்?

1.  தேவைக்கேற்ப தண்ணீரை உபயோகிக்க வேண்டும். வீண்விரயம் செய்யக் கூடாது.

قال الله تعالي : وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ}(اعراف 31)

உண்ணுங்கள். பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான்.

قال الله تعالي : إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا} (الإسراء: 27)

நிச்சயமா மிதமிஞ்சி செலவு  செய்பவர்கள் ஷைத்தானின் உடன்பிறப்புக்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு மாறு செய்தவனாவான்.

      عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ هُوَ وَأَبُوهُ وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنِ الغُسْلِ، فَقَالَ: «يَكْفِيكَ صَاعٌ»، فَقَالَ رَجُلٌ: مَا يَكْفِينِي، فَقَالَ جَابِرٌ: «كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا، وَخَيْرٌ مِنْكَ» ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ ( خ : 252)
252. 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு 'ஒரு ஸாவு' அளவு தண்ணீர் போதும்' என்று கூறினார். அப்போது ஒருவர் 'அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது' என்றதற்கு'உன்னை விடச் சிறந்த உன்னை விட அதிகமான முடி வைத்திருந்த நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது' என்று கூறினார். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவராக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்' என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.

2.  எஞ்சிய தண்ணீரை தேவையுடையோருக்கு வழங்க வேண்டும்.

        عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يُمْنَعُ فَضْلُ المَاءِ لِيُمْنَعَ بِهِ الكَلَأُ» خ : 2353

'(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால் அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்ததாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

    ஒரு தேசத்தை நிர்வாக வசதிக்காக பல மாநிலங்களாகவும் ஒரு மாநிலத்தை பல நகரங்களாகவும் நாமே பிரித்து வைத்து விட்டு ஒரு மாநிலத்தில் பிறக்கும் தண்ணீரை அது இயல்பாக வழிந்தோடுகின்ற பிற மாநிலங்களுக்கு செல்ல விடாமல் அணைகளின் மூலம் தண்ணீரை தடுத்து வைப்பதும் தர மறுப்பதும் மாபெரும் குற்றம். இக்குற்றத்தை கன்னடன் செய்யாதிருந்தால் பல விவசாயிகள் இறந்திருக்க மாட்டார்கள்.         

3.  தண்ணீர் தேவையை போக்க உதவ முன் வரவேண்டும்.

        وَقَالَ عُثْمَانُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِي بِئْرَ رُومَةَ، فَيَكُونُ دَلْوُهُ فِيهَا كَدِلاَءِ المُسْلِمِينَ» فَاشْتَرَاهَا عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ (صحيح البخاري )
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது: ரூமா கிணற்றை வாங்குபவர் யார்? அதில் அ(தை வாங்குப)வருடைய வாளி மற்ற முஸ்லிம்களின் வாளியைப் போல் (சம உரிமை பெற்றதாக) இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் அதை வாங்கி (முஸ்லிம் களின் நலனுக்காக வக்ஃபு செய்து) விட்டேன்.

عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ، وَقَالَ: أَنْشُدُكُمُ اللَّهَ، وَلاَ أَنْشُدُ إِلَّا أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الجَنَّةُ»؟ فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ: «مَنْ جَهَّزَ جَيْشَ العُسْرَةِ فَلَهُ الجَنَّةُ»؟ فَجَهَّزْتُهُمْ، قَالَ: فَصَدَّقُوهُ بِمَا قَالَ وَقَالَ عُمَرُ فِي وَقْفِهِ: «لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ وَقَدْ يَلِيهِ الوَاقِفُ وَغَيْرُهُ فَهُوَ وَاسِعٌ لِكُلٍّ» خ : 2778
அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார். (கலீஃபா) உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து) 'அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். 'ரூமா' என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி(ஸல்) அவர்கள் 'பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று கூற நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றனர்.
உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது 'இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை' என்று குறிப்பிட்டார்கள். வக்ஃபு செய்தவரே கூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம். ஆக(அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு.                                                                                                             

4.  தண்ணீரின் தூய்மையை பாதுகாக்க வேண்டும்.

          عن معاذ رضي الله عنه قال سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: اتقوا الملاعن الثلاث: البراز في الموارد، والظل، وقارعة الطريق" (سنن إبن ماجة : 328).
    சாபத்திற்குரிய மூன்று இடங்களை அஞ்சிக் கொள்ளுங்கள். (அவைகள்) நீர்வழித்தடங்கள். நிழல்.மத்திய பாதைகளாகும். 
(இவைகளில் அசுத்தம் செய்வதை தடைவிதித்தார்கள்)

5.  அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

قال الله تعالي : وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ (إبراهيم: 7)
14:7. “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).

6.  எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்?

1.  தனி மனிதன் தண்ணீரை வரம்பு மீறி பயன்படுத்துகின்றான்.
2.  தண்ணீர் சேகரிப்பதற்காக நம் முன்னோர்களால் அமைக்கப்பட்ட நதிகள் முதலிய நீராதாரங்களிலுள்ள மணல்களை அள்ளி அவை களை சுடுகாடுகளாக மாற்றி விட்டார்கள்.
3.  தண்ணீரை இயற்கையாக சுத்திகரிக்கின்ற மணல்கள் லாரி லாரியாக அள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 
4.  உயிர் வாழ்வதற்கு ஜீவதாரமாக உள்ள விவசாயத்தை விட மனித உயிர்களுக்கு வேட்டு வைக்கின்ற பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தண்ணீரை அதிகார வர்க்கத்தினர் தாரை வார்க்கின்றார்கள். பொதுமக்கள் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
5.  நிலத்தடி நீரை மிதமிஞ்சிய அளவில் அள்ளி நிலத்தடி நீரை அழித்துக் கொண்டிருக்கின்றான்.
6.  மிதமிஞ்சிய அளவில் ஆலைகளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றி பனிப்பாறைகளை உறுகச் செய்து அதில் சேகரிக்கப்பட்டுள்ள சுத்தமான குடி நீரை கடலில் கலக்கும்படி செய்கின்றான். இதனால் புவி வெப்பமடைவதுடன் குடி நீரும் வீணாய் கடலில் கலக்கின்றது. பெரு வெள்ளம் (கடந்து ஆண்டு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஏற்பட்டது போல) அல்லது பெரும் வரட்சி (தற்போது தஞ்சை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நிகழ்ந்தது போல்) ஏற்படுகின்றன.

8.  தண்ணீர் இல்லையென்றால்?

 
    தண்ணீர் இல்லையென்றால் மனிதன் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் வழி இன்றி தவிக்கும் நிலையும் அதன் பின் மரணத்தை தழுவும் நிலையும்தான் ஏற்படும். எனவேதான் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகவே நிகழும் என்று கூறுகின்றனர். இதற்கு முன்னுதாரணமே தமிழக விவசாயிகளில் மரணங்கள்.

மழைத்தொழுகை தொழுவோம்

 
இந்த வறட்சிநிலை மார இறைவனிடம் மழைத் தொழகை தொழுது துஆச் செய்ய வேண்டும்.
மேலும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாசபையின் செயற்குழு கூட்டத்திலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் மழைத்தொழுகை நடத்தும்படி தீர்மாணம் நிரைவேற்றப்பட்டுள்ளது.

1013- حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: أَخْبَرَنَا أَبُو ضَمْرَةَ أَنَسُ بْنُ عِيَاضٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَذْكُرُ أَنَّ رَجُلاً دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ باب كَانَ وُجَاهَ الْمِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا. قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ فَقَالَ: ((اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا)). قَالَ أَنَسٌ وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا، وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلاَ دَارٍ، قَالَ فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ. قَالَ وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ ثُمَّ قَالَ: ((اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ)). قَالَ فَانْقَطَعَتْ وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ.
قَالَ شَرِيكٌ فَسَأَلْتُ أَنَسًا أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ قَالَ لاَ أَدْرِي.
1013. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.  ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி “இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!“ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) “ஸல்ஃ“ என்னம் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி “இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்“ என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, “இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.  இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது“ என்றனர் என ஷரீக் கூறுகிறார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 15. மழை வேண்டுதல

மழைத்தொழுகைகு வெளியேரிச்செல்வதும் சுன்னது.

1005 - ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻧﻌﻴﻢ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻋﻦ ﻋﺒﺎﺩ ﺑﻦ ﺗﻤﻴﻢ، ﻋﻦ ﻋﻤﻪ، ﻗﺎﻝ: «ﺧﺮﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ §ﻳﺴﺘﺴﻘﻲ ﻭﺣﻮﻝ ﺭﺩاءﻩ» __________ W960 (1/341) -[ ﺷ ﺃﺧﺮﺟﻪ ﻣﺴﻠﻢ ﻓﻲ ﺃﻭﻝ ﻛﺘﺎﺏ ﺻﻼﺓ اﻻﺳﺘﺴﻘﺎء ﺭﻗﻢ 894 (ﺧﺮﺝ) ﺇﻟﻰ اﻟﻤﺼﻠﻰ. (ﻳﺴﺘﺴﻘﻲ) ﻳﻄﻠﺐ اﻟﺴﻘﻴﺎ. (ﺣﻮﻝ ﺭﺩاءﻩ) ﺟﻌﻞ ﻳﻤﻴﻨﻪ ﻳﺴﺎﺭﻩ ﺃﻭ ﺃﻋﻼﻩ ﺃﺳﻔﻠﻪ] [965، 966، 977 - 982، 5983]

9.  முடிவுரை:

தண்ணீரின் மான்பினை அறிந்து அது தொடர்ச்சியாக தங்கு தடையின்றி நமக்கு கிடைத்திட நம் முன்னோர்கள் அமைத்த நீராதங்களை பேணிப் பாதுகாத்து விவசாயத்தை செழிப்படையச் செய்து நம் ஜீவாதாரத்தைப் பாதுகாப்போம். நம் சந்ததிகளும் வாழ தகுதியான நிலையில் தேசத்தை விட்டு வைப்போம்.

DRINKING WATER AND ABULATION 
PROJECT NO .313/01/2020-1442
VILLAGE NEEMLA BASS TEHSIL PAHARI 
DISTRICT BHARATPUR RAJ (MEWAT)
WAKF BY MARHOOM ABDUL RAHEEM KUMBAKKONAM














தண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்?

பூமியில் உயிர்களுக்குத் தேவையான முக்கிய பொருட்களில் ஒன்று தண்ணீர். ஆனால் விலை மதிப்பற்ற இந்தத் திரவம், திடீரென நமக்குக் கிடைக்காமல் போனால் என்னவாகும்?

அந்த ஆறு ரொம்ப தொலைவில் இல்லை. சில நூறு மீட்டர்கள் கீழே பள்ளத்தில் பாறைகளைத் தழுவி ஓடும் ஜம்பெஜி ஆறு, சாஜ் போவெல் பார்க்கும் அளவில்தான் இருக்கிறது. ஆவலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு எட்டாத அளவுக்கு இருக்கிறது.

``நான் எவ்வளவு தாகமாக இருந்தேன் என்பதை விவரிக்க முடியாது'' என்கிறார் போவெல். மலைமுகட்டின் உச்சியில் தள்ளாடும் நிலையில் இருந்த அவரிடம் தண்ணீர் தீர்ந்துவிட்டது. ஆற்றுக்குப் போவதற்கு வாய்ப்பு கிடையாது. தன்னுடைய பரிதாபகரமான அந்த சூழ்நிலை குறித்து நினைவுபடுத்திக் கூறிய போவெல், குடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்ற கவலை தொற்றிக் கொண்ட பதற்றத்தைப் பற்றி கூறினார்.

``அந்த சமயத்தில் உண்மையிலேயே நோயுற்றது போல உணர்ந்தேன். என் உடலின் வெப்பம் தாறுமாறாக உயர்ந்தது போல உணர்ந்தேன்'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிரிட்டனில் ஷ்ரோப்ஷயரைச் சேர்ந்த சாசக பயண வழிகாட்டியான போவெல், நம்மில் பெரும்பாலானவர்கள் சாதாரணமாக நினைக்கும் அந்தப் பொருள், இல்லாத இடத்தில் சிக்கித் தவிப்பதை அனுபவிக்கும் சூழ்நிலையில் இருந்தார்.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில், குழாய்களைத் திறந்தாலே சுத்தமான குடிநீர் கிடைக்கும். அந்தப் பகுதிகளில் பல் துலக்கும்போது, ஷவரில் குளிக்கும்போது, கழிவறையில் தண்ணீரை திறக்கும்போது, எந்த சிந்தனையும் இல்லாமல் கேலன் கணக்கில் தண்ணீரை மக்கள் வீணடிக்கிறார்கள்.

ஆனால் உலகம் முழுக்க சுமார் 1.1 பில்லியன் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை. வருடத்தில் குறைந்தது ஒரு மாத காலத்திற்காவது 2.7 பில்லியன் பேருக்கு தண்ணீர் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

பூமியில் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக தண்ணீர் இருக்கிறது. நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. நமக்கு தண்ணீர் கிடைக்காமல் போனால், வெகு வேகமாக நிலைமை மோசமாகிவிடும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜம்பெஜி ஆற்றின் நீளத்தை ஒட்டி தனியாக நடைபயணம் மேற்கொண்டபோது போவெல் இந்த அனுபவத்திற்கு ஆளானார். அந்த ஆறு ஜாம்பியாவில் உருவாகும் இடத்தில் இருந்து தன்னுடைய பயணத்தை அவர் தொடங்கியிருந்தார். கிழக்கு அங்கோலாவில் அந்த ஆற்றை ஒட்டி நடந்து சென்ற அவர், நமீபியா மற்றும் போட்ஸ்வோனா எல்லைகளைக் கடந்து சென்றார். விக்டோரியா அருவிக்கு அடுத்து, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே எல்லையில் மலைச்சிகரங்களை அடைந்தார். அங்கே நடந்து செல்வதை சிரமமாக்கும் வகையில் கரடுமுரடாக இருந்தது.

``செங்குத்தான சிகரங்கள் கொண்டதாக சுமார் 150 மைல்களுக்கு இருந்தது'' என்று போவெல் தெரிவித்தார்.

2016 ஆகஸ்ட் வருடத்தின் மிகுந்த வெப்பமான காலக்கட்டம். பகலில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் அளவைத் தொட்டது. அப்போது போவெல் வயது 38. அந்த காலக்கட்டத்தில் இந்தப் பயணத்தை மேற்கொள்ள போவெல் தேர்வு செய்தார். 90 சதவீத நேரம் நீர் பரவியிருக்கும் பரோட்சே பிளபிளெயின்ஸ் பகுதியை அப்போது கடப்பது எளிதாக இருக்கும்.

தினமும் 20 மைல்கள் என்ற அளவில் அவருடைய டிரெக்கிங் நன்றாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் முகடுகளுக்குச் சென்றபோது, அவருடைய வேகம் கணிசமாகக் குறைந்தது.

``பாறைகளைக் கடந்து செல்ல வேண்டி இருந்ததால் தினமும் 2 மைல்கள் நடந்திருப்பேன். அந்த அளவுக்கு மெதுவாக செல்ல வேண்டியிருந்தது'' என்கிறார் போவெல்.

அவ்வளவு குறைவான வேகத்தில் முகடுகளைக் கடந்து மறுமுனைக்குச் செல்ல ஒரு மாதம் ஆகும் என போவெல் கணக்கிட்டிருந்தார். பல மைல்கள் தொலைவில் வேறு யாரையும் காண முடியாத சூழலில், அவரிடம் இருந்த உணவுகள் தீர்ந்து கொண்டிருந்தன. ``கீழே தொலைவில் குரங்குகள் கற்களை வீசிக் கொண்டிருந்தன. பெரிய பள்ளத்தில் கலங்கலான நீரோட்டம் இருந்தது'' என்று அவர் தெரிவித்தார்.

பள்ளத்தாக்கில் தன் பயணத்தை 2 வாரங்கள் தொடர்ந்த பிறகு, வேறொரு பாதையை கண்டறிய வேண்டும் என்று போவெல் முடிவு செய்தார். ஜம்பெஜி ஆற்றை நோக்கி வேறொரு ஆறு வருவதை அவரிடம் இருந்த வரைபடம் காட்டியது. ``அந்த ஆற்றை அடைவதற்கு சுமார் 20 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதன் உச்சிப் பகுதி எப்படி இருக்கும் என்று தெரியாது. வேகமாக நடந்தால் 4 மணி நேரத்தில் அடைந்துவிடலாம் என்று நினைத்தேன்'' என்று அவர் கூறினார்.

அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்களுடன் முகடுகளில் போவெல் சென்றார். ஜம்பெஜி ஆற்றில் இருந்தே தண்ணீரை குடித்துக் கொண்டு நடந்து வந்ததால், அதைவிட அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அவருக்குத் தோன்றவில்லை. அவர் நடக்கத் தொடங்கியபோது வெப்பம் 48 டிகிரி சென்டிகிரேடாக இருந்தது. 3 மணி நேரத்தில் முகடை அவர் கலந்துவிட்டார். அது 750 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் செங்குத்து பாதையாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். அப்போது அவரிடம் ஒரு தண்ணீர் பாட்டில் மிச்சம் இருந்தது. ஆனால் உச்சியை அவர் அடைந்தபோது, அவர் நினைத்தது போல இருக்கவில்லை.

``உச்சியில் சமவெளியாக இருக்கும், நடப்பதற்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் முற்கள் நிறைந்ததாக அது இருந்தது. அடுத்தடுத்து சிறு குன்றுகளாக இருந்தது'' என்கிறார் போவெல். பாதையை தேடுவதற்கு 3 மணி நேரம் சுற்றிச் சுற்றி வந்ததில் அவரிடம் இருந்த தண்ணீர் காலியாகிவிட்டது.

``அநேகமாக நான் 2 கிலோ மீட்டர் நடந்திருப்பேன். அப்போதும் முகடுகளைக் கடக்கவில்லை. எனவே திரும்ப கீழே செல்லலாம் என முடிவு செய்தேன்'' என்று அவர் நினைவுகூர்கிறார்.

ஆனால் மேலே வந்து ஏறிய இடத்தில் அவர் இல்லை. அப்போது ஒரு முகட்டின் விளிம்பில் இருந்தார். கீழே பள்ளத்தில் ஆறு ஓடுவதை அவரால் பார்க்க முடிந்தது. ஆனால் அங்கே செல்ல வாய்ப்பு கிடையாது.

சராசரியாக மனித உடலில் 60-70 சதவீதம் தண்ணீர் உள்ளது. வயதைப் பொருத்து அது அமையும். சிறுநீர், வியர்வை, மலம், சுவாசம் மூலம் நீர் வெளியேறுகிறது. எனவே, தண்ணீர் குடித்தல் மற்றும் உணவருந்துதல் (நமது உணவில் இருந்து மூன்றில் ஒரு பங்கு நீர் கிடைக்கிறது) மூலம் நாம் ஈடு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.

நீர்ச்சத்து குறைவதன் முதலாவது நிலைதான் தாகம். உடல் எடையில் 2 சதவீதம் குறையும்போது இது ஏற்படும். ``தாகம் தோன்றும்போது, மிச்சமிருக்கும் நீர்ச்சத்தில் உடல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என அர்த்தம்'' என்று குடலியல் சர்ஜரி துறை பேராசிரியர் திலீக் லோபோ கூறுகிறார். திரவங்கள் மற்றும் எலெக்ட்ரோலைட்கள் சமன்பாடு குறித்து அவர் ஆராய்ச்சி செய்து வருகிறார். ``சிறுநீரகங்கள் குறைவான நீரை சிறுநீர்ப்பைக்கு அனுப்பும். சிறுநீர் அடர்நிறத்தில் இருக்கும். வியர்வை குறையும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும். ரத்தம் தின்மையாக, மெல்ல நகர்வதாக மாறும். ஆக்சிஜன் அளவைப் பராமரிக்க, உங்கள் இதயத் துடிப்பு வேகம் அதிகரிக்கும்'' என்று திலீப் லோபோ தெரிவிக்கிறார்.

உடலின் தன்மைக்கு ஏற்ப, நீர்ச்சத்து குறையும் வேகம் மாறுபடும். ஆனால் 50 டிகிரி சென்டிகிரேடில் தண்ணீர் இல்லாமல், கடினமான உடற்பயிற்சி அல்லது உழைப்பு இருந்தால், நீர்ச்சத்துக் குறைபாடு சீக்கிரத்தில் மரணத்தை ஏற்படுத்திவிடும்.

``எவ்வளவு வெப்பத்தை மனித உடல் தாங்கிக் கொள்ளும் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. அதைக் கடந்தால் வெப்பத்தால் உளைச்சல் ஏற்படும், மரணமும் கூட ஏற்படலாம். மிகவும் குளிரான காலத்திலும் மரண விகிதம் அதிகரிக்கும். ஆனால் மிகவும் வெப்பமான காலங்களில் தான் இது அதிகமாக இருக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.

சூடான சுற்றுச்சூழலில் உடற்பயிற்சி செய்யும்போது, வியர்வை காரணமாக மனித உடல் ஒரு மணி நேரத்துக்கு 1.5 - 3 லிட்டர் வரை தண்ணீரை இழக்கும். சுற்றுப்புற காற்றில் உள்ள ஈரப்பதத்தைப் பொருத்து, நாம் விடும் மூச்சுக்காற்றின் ஈரப்பதம் மூலமாக மேலும் 200 - 1500 மில்லி வரை தண்ணீர் இழப்பு ஏற்படும்.

மனித உடலில் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நீர்ச்சத்து குறைபாடு லேசாக ஏற்பட்டாலும், அதிக களைப்பாக உணர்வோம், உடல் இயக்க வேலைகளை செய்வது கஷ்டமாக இருக்கும். அதிக நீரை இழக்கும்போது, வியர்வை மூலமாக சூட்டைக் குறைக்கும் திறனும் குறைந்துவிடுகிறது. இதனால் மிதமிஞ்சிய வெப்பம் ஆபத்தை உருவாக்குகிறது.

நாம் எடுத்துக் கொள்ளும் தண்ணீரை விட, இழக்கும் அளவு அதிகமாக இருக்கும்போது, நமது ரத்தம் தின்மையாக மாறத் தொடங்குகிறது. அதிக அடர்வாக மாறும். அதாவது இருதயம், நமது ரத்த அழுத்தத்தை பராமரிக்க கடினமாக வேலை பார்க்க வேண்டியிருக்கும்.

சிறுநீர் அளவைக் குறைப்பதன் மூலம் அதிக நீரை தக்கவைத்து, இதை ஈடுசெய்ய சிறுநீரகங்கள் முயற்சி செய்யும். செல்களில் இருந்து தண்ணீர் ரத்த ஓட்டத்தில் வெளியே வந்து சேரும். இதனால் செல்களின் அளவு சுருங்கும். தண்ணீர் குறைந்து, ரத்த அழுத்தம் குறைந்து 4 சதவீத உடல் எடை குறையும்போது மயக்கம் ஏற்படும்.

மூன்றாவது நிலையில், நமது உடல் எடையில் 7 சதவீதம் குறையும்போது, உடல் உறுப்பு பாதிக்கப்படும்.

``உங்கள் உடல் ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க சிரமப்படும். நிலைமையை சமாளிக்க, சிறுநீரகங்கள், குடல்கள் போன்ற அதிக முக்கியத்துவம் இல்லாத உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தின் வேகத்தை அது குறைக்கும். இதனால் அவை பாதிப்புக்கு உள்ளாகும். உங்கள் ரத்தத்தை சிறுநீரகங்கள் வடிகட்டத் தவறினால், செல் கழிவுகள் தேங்கத் தொடங்கும். ஒரு டம்ளர் தண்ணீருக்காக ஏங்கத் தொடங்குவீர்கள்'' என்று லோபோ விவரிக்கிறார்.

இருந்தாலும் நீர்ச்சத்து அதிகமாக இழப்பு ஏற்பட்டாலும், சிலரால் தீவிரமாக செயல்பட முடியும். நீண்ட தொலைவுக்கான ஓட்டப்பந்தய வீரரும், பயிற்சியாளருமான ஆல்பர்ட்டோ சலாஜர், 1984 ஒலிம்பிக் மராத்தான் போட்டியில், லாஸ் ஏஞ்சல்ஸில் கொளுத்தும் வெயிலில் பங்கேற்றபோது ஒரு மணி நேரத்துக்கு 3.06 லிட்டர் தண்ணீரை இழந்தார் என கணக்கிடப்பட்டது.

அவரது உடல் எடையில் 8 சதவீதம் குறைந்ததாகவும் தெரிய வந்தது. இருந்தாலும் மராத்தான் முடிந்ததும் சீக்கிரத்தில் அவர் மீண்டும் நீர்ச்சத்தை அதிகரித்துக் கொள்ள முடிந்தது. மருத்துவ நிபுணர்கள் குழு அவரை கவனித்துக் கொண்டது.

இருந்தாலும், தண்ணீர் கிடைக்க வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில், உதவியை நாடுவது என்று போவெல் முடிவு செய்தார். தாம் வைத்திருந்த, அவசர கால உதவிக்கான எஸ்.ஓ.எஸ். போனை அவர் ஆக்டிவேட் செய்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சேவை நிறுவனத்துடன் அது இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு உதவக் கூடிய அளவுக்கு பக்கத்தில் யாரையும் அந்த நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பதற்றம் உருவாகத் தொடங்கியது.

வேறு வழியில்லாத நிலையில், காய்ந்த மண்ணில் ஒரு பள்ளம் தோண்டி உடல் சூட்டை குளுமையாக்க முயற்சித்தார். நீர்ச்சத்து அதிகரிக்கும் பாக்கெட்டுடன் கலந்து தன்னுடைய சிறுநீரையே அவர் குடிக்கத் தொடங்கினார்.

ஆரோக்கியமான மனிதரின் சிறுநீரில் 95 சதவீதம் தண்ணீர் இருக்கும். மீதி கழிவுகளாக இருக்கும். சிறுநீரகங்கள் வெளியேற்றிய உப்புகள், அம்மோனியா போன்ற கழிவுகளாக அது இருக்கும். நீர்ச்சத்து குறைந்து யாராவது களைப்புற்றால், உடலில் தண்ணீர் குறைந்துவிடும் அந்த நிலையில், கடல் நீரை குடிப்பது போல ஆகிவிடும்.

``நீர்ச்சத்தை அதிகரித்துக் கொள்ள அவசரத்திற்கு, சிறுநீரை குடிப்பது பாதுகாப்பானது தான் என்றாலும், உப்பு மற்றும் தண்ணீரை சேமிப்பது தான் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான உடல் ரீதியிலான செயல்பாடாக இருக்கும்'' என்று லோபோ கூறுகிறார்.

``சிறுநீர் அளவு குறையும். கடைசியாக சிறுநீரகங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு, சிறுநீரை உற்பத்தி செய்வது பாதிக்கப்படும். எனவே நீர்ச்சத்தை போதிய அளவுக்கு அதிகரித்துக் கொள்வதற்கு, நடுத்தர காலத்துக்கு சிறுநீரின் அளவு போதுமானதாக இருக்காது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

நிறைய தண்ணீர் இல்லாமல் நீர்ச்சத்து அதிகரிக்கும் உப்புகளை சேர்ப்பது போவெலுக்கு உதவியாக இருக்கும், உப்புகள் மற்றும் சர்க்கரைக்கு மாற்றாக இருக்கும். ஆனால் அவருடைய உடலில் எதிர்மறை சமன்பாட்டை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. உப்பு அளவில் சமச்சீர் இல்லாத நிலை ஏற்பட்டால் இயக்கம் நின்று போவது மற்றும் மூளையில் ரத்தம் கசியவும் வாய்ப்பு உள்ளது.

அவர் தோண்டிய பள்ளத்தில் உடலை குளிர்வித்துக் கொண்டார். ஆனால் வேகமாக நீர்ச்சத்து குறைந்து கொண்டிருந்தது.

வாக்கிங் தி நைல் - என்ற ஆவணப்படத்தைப் பார்த்தது, அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் பெரிய ஆற்றை ஒட்டி நடை பயணம் மேற்கொண்டபோது, அந்த பயணக் கட்டுரை எழுத்தாளர் மாட் பவர் வெப்ப ஸ்டிரோக் தாக்குதலுக்கு ஆளானது பற்றி அந்த ஆவணப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. ``அதை நினைத்ததும், வேகமாக வெப்பம் அதிகரிப்பதாகத் தோன்றியது. என் உடல் அதிகம் சூடாவதாக தோன்றியது. உண்மையில் நலிவுற்றுப் போனேன்'' என்று போவெல் கூறினார்.

கடைசியாக எஸ்.ஓ.எஸ். குழு போவெலை தொடர்பு கொண்டது. தங்களால் ஒரு ஹெலிகாப்டரை அனுப்ப முடியும், ஆனால் அதற்கும் 4 மணி நேரம் ஆகும் என்று அவர்கள் கூறினர். ``4 மணி நேரத்தில் நான் செத்துவிடுவேன் என்று நினைத்தேன்'' என்று போவெல் நினைவுகூர்கிறார். ``இங்கே அமர்ந்திருப்பதைவிட, சிகரத்தில் இருந்து கீழே குதித்து செத்துவிடலாம் என்று எனக்கு தோன்றியது'' என்றும் அவர் தெரிவித்தார். பிடித்துக் கொள்வதற்கு மரங்களின் வேர்கள் சில இடங்களில் இருப்பதை அவர் பார்த்தார். எனவே கீழே செல்வது என முடிவு செய்தார். ஆனால் 15 அடி தூரத்துக்கு சறுக்கிக் கொண்டு போனதில் மூக்கில் காயம் ஏற்பட்டது.

நீர்ச்சத்து குறைந்து களைப்பு ஏற்பட்டதால் கீழே இறங்கும் முடிவுக்கு அவர் வந்தார். நீர்ச்சத்து குறைபாடு தீவிரமாகும்போது, மூளையின் செயல்பாடு பாதிக்கும். நமது மனநிலையை பாதிக்கும். தெளிவாக சிந்திக்கும் திறனையும் பாதிக்கும். நமது மூளைக்கு ரத்த ஓட்டம் மற்றும் மூளையின் அளவேகூட குறையும். நீர்ச்சத்து குறைபாடு லேசானது முதல் மிதமானது வரை இருந்தால் உடலின் நீரில் 2 சதவீதம் அல்லது கூடுதலாகக் குறைந்தால் - தற்காலிக ஞாபக மறதி, விழிப்பு நிலை பாதிப்பு ஏற்படும். கணக்கிடும் திறன், ஒருங்கிணைக்கும் திறன்கள் பாதிக்கும். குறிப்பாக சூடான சுற்றுப்புறத்தில் கடுமையான பணிகளைச் செய்யும்போது இவை ஏற்படும். முதியவர்களாக இருந்தால், நீர்ச்சத்து குறையும்போது சித்தபிரமை போன்ற பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அட்ரீனலின் சுரப்பு அதிகரிப்பதாலும், உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையினாலும், எதெல்லாம் கையில் கிடைக்கிறதோ அவற்றைப் பிடித்துக் கொண்டு போவெல் தொடர்ந்து கீழே சென்றார். ஒரு தொங்கு பாறையை எட்டியபோது, மயக்கமானார். சிறிது நேரம் கழித்து நினைவுக்கு வந்தார்.

``என் கைகளில் ரத்தம் வடிந்தது. முகம் முழுக்க ரத்தம். என் கால்களில் சிராய்ப்புகள்'' என்று அவர் கூறினார். அப்போதும்கூட, தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கீழ்நோக்கி அவர் நகர்ந்து கொண்டே இருந்தார். ஒருவழியாக ஆற்றுக்கு சென்று சேர்ந்தார். உடலை குளிர்விப்பது, தண்ணீர் குடிப்பது என ஒரு மணி நேரம் அங்கே செலவழித்தார். பிறகு தன் சாடிலைட் போனை எடுத்து, தாம் நன்றாக இருப்பதாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் அனுப்பினார்.

``சாஜ் தானாகவே தண்ணீரும், நிழலும் தேடிக் கொண்டு, தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டுவிட்டார்'' என்று லண்டனில் பணியாற்றும் எமர்ஜென்சி மருத்துவப் பயிற்சி டாக்டர் நட்டாலி குக்சன் தெரிவித்தார். ``நிழலில் ஓய்வு எடுத்ததால் உடல் வெப்பம் குறைந்து, நீர்ச்சத்து குறைபாடு செயல்பாடு குறைந்தது'' என்று அவர் குறிப்பிட்டார்.

மிக முக்கியமாக, குடிக்கும் தரத்திலான நீரை போவெல் அடைந்தபோது, அவர் இழந்துவிட்டிருந்த தண்ணீரை அது ஈடு செய்தது. ``நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்ய முடியும். உடலில் நீர் அளவை அதிகரித்தால், முழுமையாக குணம் அடைவது சாத்தியமே,'' என்கிறார் குக்சன்.

தண்ணீர் குடிக்க அவர் சமாளித்துக் கொள்ளாமல் போயிருந்தால், போவெலின் சிறுநீரகங்கள் செயல்படாமல் போயிருக்கும். சிறுநீரகங்கள் வழியே வெளியேற்ற போதிய தண்ணீர் இல்லாத நிலையில், நச்சுகள் தேங்கி இருக்கும். எனவே சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படாமல் போயிருக்கும். சிறுநீரக தீவிர திசு அழுகல் என்ற நிலைக்கும் அது கொண்டு சென்றிருக்கும். மீண்டும் நீர்ச்சத்தை சமன் செய்தாலும், இதில் இருந்து குணமாக பல வாரங்கள் தேவைப்படும்.

இருதயத்தில் ஏற்பட்ட கூடுதல் வேலைப்பளு, முறையற்ற இதயத் துடிப்புகளை உருவாக்கி இருக்கும், ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டிருக்கும், இருதயம் செயல்படாமல் போயிருக்கவும் வாய்ப்பு உள்ளது. நீர்ச்சத்துக் குறைபாடு இருதய இயக்கத்தைப் பாதித்து, ரத்த நாளங்கள் தடிமனாகி மாரடைப்பு அபாய அதிகரிப்புக்கும் காரணமாக ஆகியிருக்கும்.

வெப்பமான பருவநிலையில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது, பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்யும்.

``இந்த வெப்பத்தை உடலால் ஒழுங்குபடுத்த முடியாமல் போகும். இதனால் வழக்கமான உடல் இயக்கப் பாதைகளில் முக்கியமான சுரப்பிகள் பாதிக்கப்படும். இதனால் மூளை, இருதயம், நுரையீரல்கள் போன்ற உறுப்புகள் செயல்படாமல் போகலாம்'' என்று குக்சன் தெரிவிக்கிறார். கடைசியாக இது செயல்பாட்டை நிறுத்தலாம், கோமா நிலையை ஏற்படுத்தலாம், உறுப்புகள் செயல் இழப்பதால் மரணம் நேரிடலாம்.

தண்ணீர் இல்லாமல் ஒருவர் எவ்வளவு காலம் உயிர் வாழலாம் என்பது இன்னும் விவாதப் பொருளாகவே இருக்கிறது. உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் மனிதனால் சில தினங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

1944ல் இரண்டு விஞ்ஞானிகள் தண்ணீர் குடிக்காமல் இருக்க முயற்சி செய்தனர். ஒருவர் மூன்று நாட்களும், இன்னொருவர் நான்கு நாட்களும் அப்படி இருந்தனர். ஆனால் உலர் உணவுகளை எடுத்துக் கொண்டனர். அவர்களுடைய சோதனையின் இறுதி நாளில், எதையும் விழுங்க முடியாமல் அவர்கள் சிரமப்பட்டனர், அவர்களுடைய முகங்கள் ``வெளிறிப் போய்விட்டன.'' ஆனால் நிலைமை அபாயகரமாக மாறுவதற்கு முன்னதாகவே அவர்கள் பரிசோதனையைக் கைவிட்டனர்.

தண்ணீர் இல்லாமல் எவ்வளவு நாட்களுக்கு இருக்கலாம் என்பது தனிப்பட்டவர்களைப் பொருத்து மாறுபடும். உதாரணமாக, ஒரு நபர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப உடல் தகவமைப்பு செய்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தண்ணீர் குடிக்காமல் அதிக நாட்கள் இருக்கலாம் என்பது ஆண்ட்ரியாஸ் மிஹாவெக்ஸ் மூலம் தெரிய வந்தது. 1979ல் ஆஸ்திரியாவில் செங்கல் பதிக்கும் வேலை பார்த்து வந்த 18 வயதான அவர் காவல் துறையினரின் காவல் அறையில் 18 நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கே இருப்பதை காவலர்கள் மறந்து போனதால் அந்த நிலை ஏற்பட்டது. அவருடைய அந்த சூழ்நிலை குறித்து, உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர நீர்ச்சத்து குறைபாட்டு நிலைமையை நம்மில் பலரும் அனுபவிக்கும் நிலையில், உலகில் சுமார் 4 பில்லியன் மக்கள் வருடத்தில் குறைந்தது ஒரு மாதமாவது தீவிர தண்ணீர் பஞ்சத்துக்கு ஆளாகின்றனர். பருவநிலை மாற்றங்கள் காரணமாகவும், உலகில் பல பகுதிகளில் தூய்மையான குடிநீர் வசதி கிடைப்பது அரிதாகும் நிலை உள்ளது. 2025 ஆம் ஆண்டு வாக்கில், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போவெலைப் பொருத்தவரையில், தண்ணீர் இல்லாமல் உயிருக்குப் போராடிய போராட்டம் சுமார் 10 மணி நேரம் நீடித்தது. லிவிங்ஸ்டன் திரும்பி ஒரு வாரம் ஓய்வு எடுத்த பிறகு, வேறொரு பாதை வழியாக தன் பயணத்தை அவரால் தொடர முடிந்தது. தன் நடைபயணத்தை அவர் 137 நாட்களில் நிறைவு செய்தார். அவருடைய அனுபவம் ஒரு பாடமாக இருந்தது மட்டுமின்றி, தண்ணீர் எவ்வளவு முக்கியமானது என்ற பாடத்தை அவருக்குக் கற்பிப்பதாகவும் அது இருந்துள்ளது.

``அதை ஒருபோதும் இனி நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்'' என்று அவர் கூறினார்.


இறந்த விட்ட உங்கள் தாய் தந்தையருக்கு ஸதகதுல் ஜாரியா என்ற தர்மம் 
செய்யுங்கள் மறுமையயின் வாழ்விற்காக.
மௌலானா ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி

DRINKING WATER AND ABULATION
PROJECT NO .313/02/2020-1442
VILLAGE KATHWAD  TEHSIL PAHARI 
DISTRICT BHARATPUR RAJ (MEWAT)
WAKF BY THREE ONE THREE GROUP





தண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் இந்தியா













தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பாகிஸ்தானில் இரண்டு மாகாணங்களில் இந்த நிலைமை இருக்கிறது.

இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் பிரிவு செய்தியாளர் நவீன் சிங் காட்கா பயணம் மேற்கொண்டார்.



இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஹரியானா மாநிலத்தில் தரோடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதில் காரணத்துடன் கூடிய கோபம் காணப்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் அந்தப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மாதங்களாக சுத்தமான குடிநீர் வராததால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் கேட்டு முழு ஆவேசமாக ராஜ்பதி பன்வாலா என்ற விதவை முழக்கம் எழுப்பியபோது, நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் கூடாரத்தின் கீழ் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

''அரசாங்கம் வாரம் இருமுறை தரும் தண்ணீரை எங்களுடைய கால்நடைகள் கூட குடிக்க முடியாது,'' என்று போராட்டக் களத்தில் அவர் தெரிவித்தார்.

''நான் விலை கொடுத்து குடிநீர் வாங்குகிறேன். அதற்கு மாதம் 500 ரூபாய் செலவாகிறது,'' என்று நம்மிடம் கூறிய அவர், விலைகொடுத்து தண்ணீர் வாங்கிய கோப்பையைக் காட்டினார்.


போராட்டக் களத்தில் இருந்து, நம்மிடம் பேச வந்த அவருடைய தோழி நீலம் தின்ட்ஷா, தன்னால் விலை கொடுத்து தண்ணீர் கோப்பையை வாங்க முடியவில்லை என்று கூறினார்.

``தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாத கிராமவாசிகள் பலர் இருக்கிறார்கள்'' என்று முகத்தை மூடிய துணியை அகற்றியபடி அவர் குறிப்பிட்டார்.


பொது குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு, தலையில் வைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்ட அவர், ''எங்களுக்கு அளிக்கப்படும் இந்த நிலத்தடி நீர், நோய்களை ஏற்படுத்துகிறது'' என்று கூறினார்.

''என் வீட்டு வேலைகளை முடிக்கவும், விவசாய நிலத்தில் வேலை பார்க்கவும் காலையில் நான் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்றாலும், இந்தக் காரணத்தால்தான் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.''

உலக ஆதாரவள இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள உலகளாவிய தகவல் தொகுப்பில், மிக மோசமாக தண்ணீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ள இந்தியாவின் 9 மாநிலங்களின் பட்டியலில் ஹரியானாவும் ஒன்று.



அருகில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது குறித்து விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

நிலத்தடி நீரை எடுப்பதற்கு அமைத்த ஆழ்துளைக் கிணற்றில் போர்வெல் இயந்திரம் அமைக்கப்படுவதை இளம் விவசாயி நரேந்தர் சிங் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

''20 ஆண்டுகளுக்கு முன்பு முதலாவது ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது நாங்கள் 150 அடி தோண்டினோம்'' என்று விவசாயி நரேந்தர் சிங் தெரிவித்தார்.

'' சுமார் 10 ஆண்டுகள் கழித்து நாங்கள் 300 அடி ஆழம் வரை தோண்ட வேண்டியிருந்தது. இப்போது நிலத்தடி நீரைப் பெறுவதற்கு இந்த இயந்திரம் 500 அடி வரை தோண்டியுள்ளது.''

'' விவசாயத்தை விடுங்கள், விரைவில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காது. எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது'' என்கிறார் அவர்.



பூமிப்பரப்பில் இருந்த தண்ணீரும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

பஞ்சாப் மற்றும் சண்டிகரில் நகரமயமாக்கல் காரணமாக ஆக்கிரமிக்கப்பட்ட குளங்கள், சதுப்பு நிலங்கள் இருந்த இடங்களை அங்கிருந்த மூத்த குடிமக்கள் சிலர் காட்டினர்.

``பஞ்சாபில் சுமார் 140 ஒன்றியங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கருப்பு மண்டலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது காலியாகிவிட்ட நிலத்தடி நீரை நம்மால் மீண்டும் உருவாக்க முடியாது. ஏனெனில் திறந்தவெளிப் பகுதிகளை நகரமயமாக்கல் காரணமாக ஆக்கிரமித்துவிட்டார்கள்'' என்று சண்டிகரைச் சேர்ந்த உணவு மற்றும் நீர்வள நிபுணர் தேவிந்தர் சர்மா கூறினார்.

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்சினை அதிகம் நிலவும் பகுதிகளில் சண்டிகரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களுக்கு 4 முதல் 5 புள்ளிகளுக்கு இடைப்பட்டவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.














தண்ணீர் பிரச்சினை அளவின் அடிப்படையில் நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாகாணங்களை 0 முதல் 5 வரை என மதிப்பெண் கொடுத்து உலக ஆதாரவள இன்ஸ்டிடியூட் அறிக்கை தயாரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்த நிலையில், 13வது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

கிடைக்கிற நீர் ஆதாரத்தை, பயன்படுத்தும் அளவால் வகுத்து இந்தக் கணக்கீடு உருவாக்கப்பட்டதாக, இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

உலகளவில் கிடைக்கும் தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுவதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறியுள்ளது.



இந்தியாவில் தண்ணீர் மேலாண்மைக்கான உச்ச அதிகாரம் பெற்ற அமைப்பான மத்திய நீர்வள ஆணையம், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓர் அறிக்கை தயாரித்தது. நாடு முழுக்க 20 மில்லியனுக்கும் அதிகமான கிணறுகளில் இருந்து தண்ணீர் பம்ப் செய்து வெளியே கொண்டு வரப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``இந்தியா நீர்வளம் குறைந்த நாடு அல்ல. ஆனால் தீவிர அலட்சியம் மற்றும் நீர்வளங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை சரியாக கண்காணிக்காத காரணத்தால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது'' என்று அறிக்கையின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இந்தத் துறையில் இனியும் அலட்சியம் காட்டினால் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

உலகில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது என்று கடந்த காலங்களில் நாசா உள்பட பல அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

உலகில் 10-ல் 4 பேர் ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலகளாவிய அறிக்கையில் இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய இன்னொரு விஷயம், எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலும் இதே நிலை இருக்கும் என்பதுதான்.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய மாநிலங்கள் அனைத்திலும் தீவிர தண்ணீர் பிரச்சினை உள்ளதாக உலகளாவிய அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் - பஞ்சாப் மற்றும் சிந்து - என இரண்டு மாகாணங்களிலும் இதே நிலைதான் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிந்து நதி நீர் பகிர்வு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் உள்ள நிலையில் சமீபத்திய முரண்பாடுகளின்போது தண்ணீர் பிரச்சினை முக்கியமானதாக முன்வைக்கப்பட்டது.

தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ள பல பகுதிகள் முரண்பாடுள்ள மண்டலங்களில் அமைந்துள்ளன. வன்முறை ரீதியிலான மோதல் ஏற்படுவதற்கு தண்ணீரும் ஒரு பிரச்சினையாக உருவாகலாம் என்று உலகளாவிய அறிக்கை குறிப்பிடுகிறது.

``இஸ்ரேல், லிபியா, ஏமன், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் ஆகியவையும் இதில் அடங்கும்.''



30 ஆண்டுகளில் இந்தியாவின் 30 நகரங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்: 
சர்வதேச அமைப்பு எச்சரிக்கை water-scarcity

அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் 30 நகரங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறைஏற்படும் அபாயம் உள்ளதாக ‘இயற்கைக்கான உலகளாவியநிதியம்’ என்ற சர்வதேச அமைப்புஎச்சரித்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கெனவே உலகின் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

வரும் 2050-ம் ஆண்டில் உலகின் 100 பெரு நகரங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் 30 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இந்திய நகரங்களில் ஜெய்ப்பூர் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தானே, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.

உலக நகரங்களில் பெய்ஜிங், ஜகார்த்தா, ஜோகன்னஸ்பர்க், இஸ்தான்புல், ஹாங்காங், மெக்கா, ரியோடி ஜெனிரோ உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சீனாவின் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

2050-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் 100 நகரங்களில் தற்போது 35 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் முக்கிய நகரங்களாக இவை உள்ளன. உலகில் தற்போது 17 சதவீத மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். 2050-ல் இது 51 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிதியத்தின் இந்திய கிளைக்கான திட்ட இயக்குநர் செஜல் வோரா கூறும்போது, “இந்தியாவின் சுற்றுச்சூழல் எதிர்காலம் அதன் நகரங்களை சார்ந்துள்ளது.

இந்தியா விரைவாக நகரமய மாக்கப்பட்டு வருவதால் அதன்வளர்ச்சியில் நகரங்கள் முன்னணியில் இருக்கும். நகர்ப்புற நீராதாரங்களை புனரமைப்பது, நீர்பிடிப்பு பகுதிகளை மீட்டெடுப் பது போன்ற இயற்கை சார்ந்த தீர்வுகள் இந்தியாவுக்கு நன்மை களை வழங்கக் கூடும்” என்றார்.



தண்ணீர் பற்றாக்குறை: நம் குழந்தைகளின் இறப்பிற்காக காத்திருக்கும் பருந்துகள்!


வெயில் காலம் வந்துவிட்டது. இப்போதே பல கிராமங்களில், பல மைல் தூரம் ஒரு குடம் தண்ணீருக்காக நடக்க துவங்கிவிட்டனர். இத்தனை நாள், இது எங்கோ கிராமத்தில் இருக்கும்,  நமக்கு சம்மந்தம் இல்லாத மக்களின் பிரச்னை என்று பேசிவந்தோம். ஆனால், இனி நாம் அப்படி மாற்றான் பிரச்னையாக கருத முடியாது. ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் ஆபத்து வந்துவிட்டது. இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகள் அதன் பத்து வயதில் தண்ணீருக்காக பிச்சை எடுக்க கூட நேரலாம். ஆம், 2025 -ல் இந்தியாவில் மோசமான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

அரசே ஒத்துக் கொள்கிறது:


தண்ணீர் பற்றாக்குறை:  நம் குழந்தைகளின் இறப்பிற்காக காத்திருக்கும் பருந்துகள்! 
சில ஆண்டுகளுக்கு முன்பு, The world watch என்ற அமைப்பு, “நாம் வாழும் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படாத உலகளாவிய சுற்றுச்சூழல் சவால் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கலாம்” என்றது. ஆனால், அது நிஜமாகிவிட்டது. அரசின் புள்ளிவிபரங்களே, '2050 ல், இந்தியா ஒரு மோசமான தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும்' என்கிறது. இனியும், தண்ணீருக்காகதான் போர் ஏற்படும் என்று பேசுவதை மற்றொரு அபத்தம் என்று நாம் சுலபமாக கடந்து சென்றுவிட முடியாது.

அண்மையில், பாராளுமன்ற கேள்வி நேரத்தில் பேசிய நீர் வளங்களுக்கான மத்திய இணை அமைச்சர் சன்வார் லால் ஜாட், “ஒரு தனியார் ஆலோசனை நிறுவனம் எடுத்த ஆய்வில், இந்தியா 2025 ல், தனது மக்களுக்கு அளிக்க போதுமான நீர் இன்றி தவிக்கும்" என்கிறது. ஆனால், 1999-ம் ஆண்டு முதல் உள்ள புள்ளி விபரங்களின்படி, அவ்வளவு விரைவில் தண்ணீர் பிரச்னை வராது. ஒரு வேளை, 2050 ல் வரலாம்.” என்றார்.

அவர் சொல்லும் கணக்கையே எடுத்துக் கொண்டால் கூட,  நிச்சயம் அடுத்த தலைமுறை மோசமான தண்ணீர் பிரச்னையை சந்திக்கும். ஆனால், நடந்து கொண்டிருக்கும் அபத்தங்களை ஆய்வு செய்தால் பிரச்னை அவ்வளவு தொலைவில் இல்லை என்று தெரிகிறது.

தண்ணீர் பற்றாக்குறை:  நம் குழந்தைகளின் இறப்பிற்காக காத்திருக்கும் பருந்துகள்! 
நாசா எச்சரிக்கிறது:

இது மட்டுமல்லாமல், அண்மையில் நாசா வெளியிட்டுள்ள செயற்கைகோளிலிருந்து எடுக்கப்பட்ட படம், வட மாநில மாநகரங்களான டெல்லி, ஜெய்ப்பூரில் நிலத்தடி நீர் அளவு மோசமாக குறைந்து வருவதை காட்டுகிறது. நாம் உடனடி நடவடிக்கை எடுக்க தவறுவோமாயின், ஏறத்தாழ 11 கோடி மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டி காட்டுகிறது.    

தண்ணீர் பற்றாக்குறை:  நம் குழந்தைகளின் இறப்பிற்காக காத்திருக்கும் பருந்துகள்! 
பல்வேறு வடிவங்களில், ஒவ்வொரு ஆண்டும் நமக்கு கிடைக்கும் நீரின் அளவு 1123 பில்லியன் கன மீட்டர். சென்னை மாநகரத்தை ஒரு பெரிய தண்ணீர் தொட்டியாக மாற்றினால், இந்த தண்ணீரை நிரப்பிவிடலாம். இதில் 690 பில்லியன் கன மீட்டர் நீர், மேற்பரப்பு நீர் ஆதாரங்களான, ஏரிகள், ஆறுகள் மூலம் பெறப்படுகிறது. மிச்ச நீரை நாம், நிலத்தடி நீர் மூலமாக பெறுகிறோம். ஆனால், நாம் தொடர்ந்து உறிஞ்சுவதால், நிலத்தடி நீர் படு மோசமாக குறைந்து வருகிறது.

1999 ம் ஆண்டு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி,  2025 ல் இந்தியாவின் தண்ணீர் தேவையாக 843 பில்லியன் கன மீட்டர் இருக்கும். இது 2050 ம் ஆண்டு, 1180 ஆக உயரும். ஆனால், அதன் பின்புதான் இந்தியாவில் அதிகமான தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன, இந்தியாவின் முக்கிய நீராதரமாக இருக்கும் கங்கையும் படு மோசமாக பாழடைந்தது. கங்கை மட்டும் அல்ல, தொழிற்சாலைகள் தனது கழிவுகளை எந்த சுத்திகரிப்பும் செய்யாமல் ஆறுகளில் விடுவதாலும், பெரும் அணைகள் கட்டப்படுவதாலும், இந்தியாவில் உள்ள 275 ஆறுகள் படுமோசமாக மாசடைந்துள்ளன. அதனால், நிச்சயம் தண்ணீர் பற்றாக்குறை அரசு கணித்திருப்பதற்கு முன்பே வரும்.


நிலத்தடி நீர் வற்றுகிறது:

இந்தியா,  தன் 40 சதவீத தண்ணீர் தேவைக்காக, நிலத்தடி நீரை நம்பி இருக்கிறது. அதுவும் குறிப்பாக, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் 100 சதவீதமும், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா 70 சதவீதமும் தம் தேவைக்காக நிலத்தடி நீரை நம்பி இருக்கிறது. இதுதான் படுமோசமாக நிலத்தடி நீர் குறைந்து போக காரணமாக இருக்கிறது. முன்பே, தமிழகத்தில் 95 சதவீத கிணறுகள் வற்றிவிட்டன. மிச்சம் இருக்கும் கிணறுகளில் ஆண்டுக்கு 5 அடி வேகத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறை:  நம் குழந்தைகளின் இறப்பிற்காக காத்திருக்கும் பருந்துகள்! 
உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 10 கோடி மக்கள், 2012 லிருந்தே சுத்தமான தண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறார்கள்.

பிரச்னைகளுக்கான தீர்வு எளிமையாக இருக்கும்போது, கடவுள் பதிலளிக்கிறார் - இது என்ஸ்டீன் சொல்லியது. ஆனால், நம் பிரச்னைகளை சிக்கல் ஆக்கி விட்டோம். இப்போது கடவுளிடம் தீர்வை கேட்க முடியாது. அதற்கான, தீர்வை நாம்தான் தேட வேண்டும்.

நீர் வெறும், நீரல்ல...:

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக ஆய்வு, டெல்லியில் ஒவ்வொரு வீட்டிலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூதம், அதன் 70 சதவீத நீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என்கிறது. சர்வதேச அளவில் ஒருவருக்கு பரிந்துரைக்கப்பட்ட 250 லிட்டரை மட்டும் டெல்லி மக்கள் நுகவார்கள் என்றால், 89 சதவீத தேவையை பூர்த்தி செய்யலாம்.

ஆனால் அதிக கேடுகளை விளைப்பது, தொழிற்சாலைகளும் மிகு உற்பத்தியும்தான். இந்தியாவின் 1.5 சதவீத நீர்வளம், மறைநீராக ஏற்றுமதி ஆகிறது. இங்கிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகும் மறை நீரை நாம் நிறுத்தினால், அதாவது அதிக தண்ணீரை உறிஞ்சும் ஆடைகள், வாகனங்கள் ஏற்றுமதிக்கான உற்பத்தியை உடனடியாக நிறுத்தினால் 1.3 கோடி மக்களுக்கான குடிநீர் கிடைக்கும். அதாவது, மொத்த மும்பை மக்களுக்கும் நாம் தங்கு தடை இன்றி குடிநீர் வழங்கலாம்.

இதில் அரசாங்கம் தலையிட்டு சில கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். அதே வேளை, நம் தேவையில்லாத நுகர்வதையும் குறைக்க வேண்டும். ஒரு செல்ஃபோன் உற்பத்தி செய்ய ஏறத்தாழ 10 ஆயிரம் லிட்டர்களும், ஒரு ஜீன்ஸ் தயாரிக்க 9 ஆயிரம் லிட்டர்களும், கார் உற்பத்தி செய்ய 1 இலட்சம் லிட்டர்களும் தேவைப்படுகிறது. ஆனால், நாம் தேவைக்கு அதிகமாக எவ்வளவு பொருட்களை வாங்கி குவிக்கிறோம்....?நம் தேவையில்லாமல் நுகர்வதை தவிர்ப்பதன் மூலம், நம் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்வை அளிக்கிறோம்.

தண்ணீர் பற்றாக்குறை:  நம் குழந்தைகளின் இறப்பிற்காக காத்திருக்கும் பருந்துகள்! 
தண்ணீர் என்பது வெறும் நீரல்ல...அது நாகரிகம், பண்பாடு சம்பந்தப்பட்டது. ஆம், உலக நாகரீகங்கள் எல்லாம், நீர் நிலை ஓரத்தில் தான் தோன்றியது. நீரை அழிக்கிறோமென்றால், நாம் நாகரீகங்களை அழிக்கிறோம் என்று அர்த்தம். தண்ணீர் இல்லை என்றால், இடபெயர்வுகள் நடக்கும், கலகம் வெடிக்கும்.

உங்களுக்கு கெவின் கார்டர் எடுத்த, புலிட்சர் விருது வென்ற, உலகை உலுக்கிய, குழந்தையின் மரணத்திற்காக காத்திருக்கும் பருந்து புகைப்படம்... நினைவிருக்கிறதா...?  நாம் இந்த தண்ணீர் சிக்கலை தீர்க்காமல் போனால், நாளை நம் குழந்தைகளின் இறப்பிற்காகவும், அந்த பருந்து காத்திருக்கும். அதற்கு முன்னால் விழித்துக் கொள்வோம்.

- மு. நியாஸ் அகமது


விழித்துக்கொள்ள நேரம் வந்துவிட்டது..! 

தண்ணீர் பற்றாக்குறை முன்னெச்சரிக்கை அறிகுறிகளை இனியாவது கவனிப்போம்..!

இந்தியாவின் மிகப்பெரும் மக்கள் தொகைக்கு இந்த பருநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் சேமிப்பின்மை ஆகிய இரு விஷயங்களும் வறுமைக்கான மிகப்பெரும் காரணங்களாக இருக்கின்றன.

தண்ணீர் பற்றாக்குறைகளையும், நெருக்கடி அவலங்களையும் பற்றி விளக்க பல உண்மைகள், புள்ளி விவரங்கள் இருக்கின்றன. அதேசமயம் அவை அனைத்திற்கும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நாகரீகமும் ஒரு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

பல வருடங்களாக இந்த வளர்ச்சியை கண்கானித்து வருகிறோம். சில நேரங்களில் இயற்கை பேரிடர்களை சந்திந்துள்ளோம். அல்லது, பருவகால ஏற்ற இறக்கங்களை சந்திக்கிறோம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நீர்வளங்கள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த அறிகுறிகள் நமக்கான எச்சரிக்கை மணி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

பொருளாதார நெருக்கடி :  தண்ணீர் பற்றாக்குறை என்பது சிறு பகுதியாக இருக்கும் கட்டமைப்புக் குறைபாடுகளால் நிகழ்வதில்லை. அதனால்தான் தண்ணீர் நிரம்பியிருக்கும்  இடங்களில் வசிப்பவர்களுக்கும் தண்ணீரைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தண்ணீரை முறையாக சேமித்து வைக்கவும், அவற்றை சரியான முறையில் பராமரிக்கவும் முயற்சிகளை முன்னெடுக்காததுதான் முக்கிய காரணம். அதனால்தான் தண்ணீர் திருட்டு  அதிகரிக்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இந்த அக்கறையின்மையால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கிறது.

பருவ மாற்றத்தின் தீவிரம் : வானிலை மாற்றங்கள் பருவ மாற்றங்களையும் பாதிக்கின்றன. ஆனால் இதை ஆழமாக கவனித்தால் சுற்றுச்சூழல் சமநிலையின்மையால் ஏற்படும் பாதிப்புதான் என்பது புரியும். இதற்கு முக்கியக் காரணம் வளர்ந்து வரும் கட்டிட கோபுரங்கள்தான். இதனால் நிலத்தில் இயற்கையாக உருவாகும் தண்ணீர் விரிந்து பரவுவதற்கு இடமின்றி தடைபடுகிறது. நிலத்தடி நீர் இல்லாமல் போகிறது. இதனால் மழை பெய்யும் சாத்தியக் கூறுகளும் குறைகின்றன. பருவநிலையில் மாற்றம் உண்டாகிறது.

இந்தியாவின் மிகப்பெரும் மக்கள் தொகைக்கு இந்த பருநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் சேமிப்பின்மை ஆகிய இரு விஷயங்களும் வறுமைக்கான மிகப்பெரும் காரணங்களாக இருக்கின்றன. அதாவது இந்தப் பெருங்கூட்டமானது பொருளாதார உற்பத்தி திறனை விடுத்து தண்ணீரைத் தேடி அலைவதிலேயே நேரம் செலவழிக்கின்றனர். அப்படி ஒருவேளை தண்ணீர் கிடைத்துவிட்டாலும் அது சுத்தமான குடிநீராக இருப்பதில்லை. இதனால் எண்ணற்ற நோய்கள் உருவாகின்றன.

இதோடு மக்களிடம் நிலவும் சுகாதாரமின்மை, ஆரோக்கியமின்மை சேர்ந்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடுகின்றன. இப்படி தண்ணீர் பற்றாக்குறை, பருவ மாற்றம், தொழில் வளர்ச்சி இல்லாமை , நோய்கள் என மக்களை வறுமையிலும், பட்டியினியின் பிடியிலும் தள்ளுகிறது. இப்படித்தான் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றன.

இந்திய மக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் விழித்துக்கொள்ள இதுவே சரியான நேரம். பாதிக்கப்படும் மக்களுக்காக தண்ணீரைப் பாதுகாக்கும் முயற்சிகளை செய்ய வேண்டும். சுகாதார முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இந்த அறிகுறிகளை நாம் கவனிப்பதே தண்ணீர் பற்றாக்குறையை தடுப்பதற்கான முதல் படியாக இருக்கும். இதனால் அதிகம் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வை மீட்டுத் தரமுடியும்.

சி.என்.என் நியூஸ் 18 மற்றும் ஹார்பிக் இந்தியா முன்முயற்சியான மிஷன் பானி, நீர் பற்றாக்குறை மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுகிறது, ஒவ்வொரு இந்திய குடிமகனும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் இரண்டையும் சம அளவில் பெறுவதற்கு இந்தக் குழு  உறுதிசெய்கிறது. நீங்களும் இந்த மைல்கல் உருமாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள். மேலும் தண்ணீரை சேமிக்கவும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் உறுதிமொழி எடுங்கள். மேலும் விவரங்களுக்கு https://tamil.news18.com/mission-paani/


தண்ணீரை சரியாக பயன்படுத்துவது எப்படி?


இந்தியாவில் கிட்டத்தட்ட 75 சதவீத வீடுகளில் குடிநீர் இல்லை.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது ஒரு அடிப்படை தேவையாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 75 சதவீத வீடுகளில் குடிநீர் இல்லை. எனவே, தண்ணீரை பாதுகாப்பது அவசியமானது.

பூமியில் ஒரு குறிப்பிட்ட அளவு நீர் மட்டுமே உள்ளது, அதனை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். தண்ணீரை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அதை சரியாகப் பயன்படுத்துவது பற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வுடன், நாம் ஒவ்வொருவரும் நம் பங்களிப்பைச் செய்யலாம்.

நீர் பாதுகாப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில வழிகள் :

நீரை சேமிக்க வேண்டும், நீர் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மக்களும், சமூகங்களும் ஒன்றிணைந்தால் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறையை நாம் தவிர்க்க முடியும்.

தொழிற்சாலைகள் அதிகரிப்பு, அதிக மக்கள் தொகை மற்றும் அதிகப்படியான தண்ணீரைப் பயன்படுத்துவதால், தண்ணீர் பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

நீர் சுழற்சியின் மூலம் நீர் இறுதியில் பூமிக்கு திரும்பினாலும், அது எப்போதும் ஒரே இடத்திற்குத் திரும்பாது. எனவே, குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம், இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலமும் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் முடியும்.

தண்ணீரை சேமிப்பதன் மற்றொரு நன்மை என்னவென்றால், அது சுற்றுச்சூழலுக்கும் உதவக்கூடும். நீர் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம், வீடுகள், வணிகங்கள், பண்ணைகளில் செலவழிக்கும் ஆற்றலையும், எரிபொருளையும் குறைக்க உதவலாம். இது மாசுபாட்டைக் குறைப்பதற்கும், புதைபடிவ எரிபொருள் வளங்களைப் பாதுகாப்பதற்கும் உதவுகிறது.

இதனிடையே ஒவ்வொரு ஆண்டும், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. தண்ணீர் சேமிப்பு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே, பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் கட்டாயம் உருவாகும் என நீர்வள நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வீதிகளில் ஆறாக ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் இன்று, குடிக்க கிடைக்காமல், மக்களை வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது. குடிநீர் பற்றாக்குறைக்கு வறட்சி காரணம் காட்டப்படுகிறது. ஆனாலும், அதிகப்படியான மழை பெய்யும் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்காமல் குளம், குட்டைகளை வறண்டு போக செய்து குடியிருப்புகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். மேலும் துார்வாரப்படாத ஏரி, குளம், குட்டைகள், ஆறுகளில் ஆக்கிரமிப்பு, தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நீர் பற்றாக்குறை மட்டுமின்றி, நிலத்தடி நீரையும் மாசுபட வைத்துள்ளது.

உலகின், 77 சதவீதம் பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. 23 சதவீத நிலப்பரப்பில் ஏரி, குளம், ஆறுகள் இருந்தும் குடிநீராக வெறும் 2.3 சதவீத நீர் மட்டுமே பயன்படுகிறது. இன்றைய சூழலில், புவி வெப்பமயமாதல் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது. சாதாரணமாக ஆயிரம் அடிக்கு கீழே தான் நீர் கிடைக்கிறது. எனவே தற்போதாவது நாம் விழிப்புணர்வுடன் நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம் என உறுதி ஏற்போம்.

இதுபோன்ற முயற்சிகளை செய்ததற்காக, நியூஸ் 18 ஹார்பிக் இந்தியாவுடன் மிஷன் பானி முன்முயற்சிக்காக ஒத்துழைத்துள்ளது, இது சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.


சுத்தமான தண்ணீர் இல்லாமல் போனால் இந்தியாவில் நிலை என்னவாகும்?

‘Day Zero’ வந்துவிட்டால் கிராமப்புற வாழ்க்கை முற்றிலும் சிதைந்து அங்கிருந்து வாழ்வாதாரத்திற்காக ஏற்கனவே திணறிக்கொண்டிருக்கும் நகரங்களை நோக்கி வெகுஜன இடம்பெயர்வுக்கு வழிவகுக்கும், இது லட்சக்கணக்கானவர்களை வறுமையின் பிடியில் தள்ளிவிடும்.

ஆங்கிலத்தில் ‘Day Zero’ என குறிப்பிடுகிறார்கள். அப்படியென்றால் ஒரு தேசத்திலோ அல்லது பிராந்தியத்திலோ தண்ணீர் இல்லாமல் வற்றிப்போவது என அர்த்தம். இது ஒரு வரலாற்று பேரழிவாகும், இந்தியாவில் இது போன்ற ஒரு சூழல் என்றைக்கும் நமக்கு வந்துவிடாது என நம்புவோம்.

வறட்சியின் அச்சுறுத்தல் மற்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதாரமின்மை ஆகியவை இந்தியாவை நிர்வகிக்கும் சமூக மற்றும் குடிமை கட்டமைப்புகளில் பயங்கரமான மற்றும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்.

அத்தகைய பேரழிவைத் தவிர்க்க முயற்சிகளில் கவனம் செலுத்தவும், இயக்கவும், திட்டமிடப்பட்ட விளைவுகள் எச்சரிக்கை அறிகுறிகளாக செயல்படுகின்றன. சரியான நேரத்தில் நிலைமையை சரிசெய்யத் தவறினால், நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நிலைமை இவ்வாக இருக்கையில் நாட்டில் பெரும் பகுதிகளில் தண்ணீர் பிரச்னை, அதன் விளைவாக சுகாதாரமின்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் சரிசெய்யாவிட்டால் எதிர்வரும் ஆபத்து என்னவாக இருக்கும் என்று அது நமக்கு நினைவூட்டுகிறது.

நகர்ப்புற - கிராமப்புற பிளவு:

நீர்வளங்களின் குறைவு மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் இல்லாமை நமது கிராமப்புற குடிமக்களை அளவுக்கதிகமாக பாதிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் அழிவுநிலைக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயத்தை தங்களின் வாழ்வாதாரமாக கொண்டிருப்பவர்கள். அங்கு ‘Day Zero’ வந்துவிட்டால் கிராமப்புற வாழ்க்கை முற்றிலும் சிதைந்து அங்கிருந்து வாழ்வாதாரத்திற்காக ஏற்கனவே திணறிக்கொண்டிருக்கும் நகரங்களை நோக்கி வெகுஜன இடம்பெயர்வுக்கு வழிவகுக்கும், இது லட்சக்கணக்கானவர்களை வறுமையின் பிடியில் தள்ளிவிடும்.

சமூக ஒத்திசைவு இழப்பு:

ஒவ்வொரு டிஸ்டோபியன் கதையும் வளங்கள் குறைவது சமூகங்களை எவ்வாறு பிரிக்கிறது என்பதை விவரிக்கிறது. இந்தியாவுக்குள் வெவ்வேறு குழுக்கள் ஒரே குறைவான நீர் ஆதாரம் மற்றும் சுகாதாரத்திற்காக போட்டியிட நிர்பந்திக்கப்பட்டால் இக்கதைகள் உண்மை ஆகும் என்பதே உண்மை. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் பெருமையுடன் கூறும் இந்தியாவின் சமூக ஒத்திசைவு இதன் மூலம் நிலைகுலைந்து போகும்

இந்திய கனவின் முடிவு:

இந்தியாவின் வளர்ச்சி அதன் மக்களின் முற்போக்கான மற்றும் தனித்துவமான ஆசைகளை பெரிதும் நம்பியுள்ளது. இந்த கனவுகளைத் தொடர, அவர்களையும் ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்துவதற்கு, இளம் இந்தியர்களுக்கு தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் போன்ற வாழ்க்கையின் அத்தியாவசிய கட்டுமானத் தொகுதிகளுக்கு கட்டுப்பாடற்ற அணுகல் தேவை.

இளைஞர்களின் சுகாதாராமான மற்றும் முழுமையான வாழ்க்கை ‘Day Zero’-வால் பறிக்கப்படுமானால், இது இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தில் மாற்ற முடியாத சரிவுக்கு வழிவகுக்கும். இதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் நமது செல்வத்தை மேலும் கரைக்கும்,
இதனால் ஏராளமான இந்தியர்கள் நம்பிக்கை அல்லது நம்பிக்கையிலிருந்து விலகிவிடுவார்கள்.

மேலும் இதனால் பல பாதகமான விளைவுகள் உள்ளன, அவை ‘Day Zero’ வருவதற்கு முன்பே நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கத் தொடங்கும். நீர் நெருக்கடியைத் தீர்க்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் நாம் கவனம் செலுத்தாமல் போனால் நீர் மற்றும் சுகாதாரம் குறித்த நமது ஏற்பாடுகளில் அதிகரிக்கும் மாற்றங்கள் கூட மக்களின் வாழ்க்கையில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் எப்போதும் நேர்மறையானவை என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

இந்தியாவின் விலைமதிப்பற்ற நீர் வளங்களை காப்பாற்றுவதற்கும் சுகாதாரத்தை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றுவதற்கும் ஒரு உந்துதலுக்கு வழிவகுக்கும் ‘Mission Paani’ Harpic Indiaவுடன் CNN News18 இணைந்து உருவாக்கியிருக்கும் ஒரு முன்னணி முயற்சி . ஒரு ஜல் பிரதிஜ்யத்தை (Jal Pratigya) எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் இதற்காக பங்களிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு www.news18.com/mission-paani என்ற இணையதள பக்கத்தை




No comments:

Post a Comment